டி20 உலக கோப்பை: ரூ.12 கோடி பரிசு... இரண்டு முறை ட்ரிங்ஸ்... புதிய ரிவியூ... ஐசிசி அறிவிப்பு!
வரும் 17 ஆம் தேதி துவங்க இருக்கும் டி20 உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 12 கோடி பரிசுத் தொகையாக அறிவித்தது ஐ.சி.சி.
ஐ.சி.சி. நடத்தும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் 'டி-20' உலக கோப்பை 7வது சீசன் வரும் அக். 17 முதல் நவ. 14 வரை நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான பரிசுத் தொகையை ஐ.சி.சி., அறிவித்துள்ளது. இதன்படி மொத்த பரிசுத் தொகை ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
'டிரிங்ஸ்' இடைவேளை
'டி-20' போட்டியில் ஒரே ஒரு முறை 'டிரிங்ஸ்' இடைவேளை வழங்கப்படும். ஆனால் இத்தொடரில் 2 முறை வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா 2.30 நிமிடம் 'டிரிங்ஸ்' இடைவேளை வழங்கப்படும் என, ஐ.சி.சி., தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்.17ம் தேதி தொடங்கி நவ.14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பரிசுத் தொகை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது. பைனலில் வென்று உலக கோப்பையை வெல்லும் அணிக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கங்கப்பட உள்ளது. 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6 கோடியும், அரையிறுதியில் தோற்கும் 2 அணிகளுக்கும் தலா ரூ.3 கோடியும் வழங்கப்படும். இது தவிர அரையிறுதி வாய்ப்பை நழுவவிடும் 8 அணிகளுக்கு தலா ரூ.50 லட்சம், முதல் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ.30 லட்சம் கிடைக்கும். சூப்பர் 12 சுற்றில் விளையாட இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 இடங்களுக்கான அணிகளை தேர்வு செய்ய தகுதிச் சுற்று நடத்தப்படுகிறது. அதில் இலங்கை, வங்கதேசம், அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, ஒமான், பாப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளன.
ஆண்களுக்கான 'டி-20' உலக கோப்பையில் அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ்., ரிவியூ முறை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒரு அணி, போட்டியின் ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா 2 முறை ரிவியூ கேட்கலாம். இதற்கு முன், பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பையில் (2018, 2020) டி.ஆர்.எஸ்., பயன்படுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பரவல், அனுபவம் குறைந்த அம்பயர்கள், வேலைப்பளு காரணமாக தவறுகள் நேரலாம் என்பதால் மூன்று வித போட்டிகளிலும் கூடுதலாக ஒரு டி.ஆர்.எஸ்., ரிவியூ கேட்கலாம் என தெரிவித்திருந்தது. இதனையடுத்து டெஸ்டில் 3, ஒருநாள், 'டி-20'யில் தலா 2 'ரிவியூ' வழங்கப்பட்டுள்ளது.