French Open 2022: பிரஞ்சு ஓபன் 2022: 7 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதியில் ரோகன் போபண்ணா !
பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு ரோகன் போபண்ணா முன்னேறியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் முக்கியமான தொடர்களில் ஒன்று பிரஞ்சு ஓபன். இந்த டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போப்பண்ணா ஆடவர் இரட்டையர் பிரிவில் நெதர்லாந்து நாட்டின் மிடில் கூப் உடன் இணைந்து விளையாடினார். பிரஞ்சு ஓபன் தொடரின் மூன்றாவது சுற்றில் குரோஷியா நாட்டைச் சேர்ந்த பவிக் மெட்டிக் இணையை வீழ்த்தியிருந்தது. தரவரிசையில் 2ஆம் நிலை ஜோடியை வீழ்த்தி அசத்தியது.
இந்நிலையில் இன்று காலிறுதிச் சுற்றில் ரோகன் போப்பண்ணா மற்றும் மிடில் கூப் இணை கிளாஸ்பூல்-ஹெலியோவாரா ஜோடியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் போப்பண்ணா ஜோடி இழந்தது. அதன்பின்னர் இரண்டாவது செட்டை 6-4 என வென்றது. இதைத் தொடர்ந்து 3வது செட் நடைபெற்றது. அதில் இரு ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்காரணமாக இரு ஜோடிகளும் தலா 6-6 என சமமாக இருந்தனர்.
Rohan Bopanna & Matwe Middelkoop are into the semis of Men's Doubles at the French Open. 👏
— Olympic Khel (@OlympicKhel) May 31, 2022
This will be Bopanna's:
✅ First-ever semi-final at Roland Garros
✅ First semi-final since Wimbledon 2015
Can they go all the way? 🎾#RolandGarros | @rohanbopanna | @Mside83 pic.twitter.com/Qyfhd63p46
இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் செட் நடைபெற்றது. அதை 10-3 என்ற கணக்கில் போப்பண்ணா ஜோடி வென்றது. அத்துடன் 4-6,6-4,7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதி போட்டிக்கு ரோகன் போப்பண்ணா முன்னேறியுள்ளார். மேலும் முதல் முறையாக பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
ரோகன் போபண்ணா கடைசியாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். அதன்பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்