பார்முலா 1 கார் ரேஸ் : 7 முறை சாம்பியனான ஹேமில்டனை வீழ்த்தி 24 வயது சாம்பியன்..!
அபுதாபியில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தில் 7 முறை சாம்பியனான ஹேமில்டனை, 24 வயதே ஆன மேக்ஸ் வெர்ஸ்டேப்பன் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டுக்களில் பார்முலா 1 கார் பந்தயமும் ஒன்றாகும். பார்முலா 1 கார் பந்தயங்களில் மிகவும் வெற்றிகரமான வீரராக வலம் வருபவர் ஹேமில்டன். இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்முலா 1 உலக ஓட்டுநர்கள் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியிலும் ஹேமில்டன் பங்கேற்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கார் பந்தயத்தில் ஹேமில்டனே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் இளம் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டேப்பன் அனுபவசாலியும், பல முறை பட்டம் வென்றவருமான ஹேமில்டனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மேக்ஸ் வெர்ஸ்டப்பனுக்கு இதுவே முதல் சாம்பியன் பட்டம் ஆகும்.
இந்த போட்டியின் இறுதிச்சுற்றில் ஏழுமுறை சாம்பியனான ஹாமில்டனுக்கும், மேக்ஸ் வெர்ஸ்டேப்பனுக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் 24 வயதே ஆன மேக்ஸ் வெர்ஸ்டேப்பன் 1 மணி நேரம் 22 நிமிடம் 9 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார். முன்னாள் சாம்பியன் கடுமையாக போராடி இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த போட்டியில் மெக்லேரன் லண்டோ நோரிஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்