கத்துக்குட்டியை கரை சேர்த்த ஜிம்பாவே கேப்டன்... பிரண்டன் டெய்லர் ஓய்வுக்கு வித்தியாசமாக விடை கொடுத்த வீரர்கள்!
"இன்றைய 90ஸ் கிட்ஸ் கிரிக்கெட் பார்க்க தொடங்கிய காலத்தில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வருகிறார் பிரண்டன் டெய்லர். "
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் டெய்லர் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியே பிரண்டன் டெய்லரின் கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது.
தனது கடைசி சர்வதேச போட்டியில் பேட்டிங் செய்ய வந்த டெய்லருக்கு கேப்டன் அண்டிரியூ பால்பரின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி வீரர்கள் இருபுறமும் பேட்களை உயர்த்திப் பிடித்து பிரமீடுகள் அமைத்து வரவேற்றனர். எதிரணியான அயர்லாந்து வீரர்களும் பிரண்டன் டெய்லரை கைத்தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். இது விளையாட்டுக்கே உரிய ஒரு நல்ல அனுகுமுறையாக பார்க்கப்பட்டது.
இன்றைய 90ஸ் கிட்ஸ் கிரிக்கெட் பார்க்க தொடங்கிய காலத்தில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வருகிறார் பிரண்டன் டெய்லர். அதாவது 2004 ஆம் ஆண்டு ஹீத் ஸ்ட்ரீக் ஓய்வுபெற்றபின் கடுமையான தடுமாற்றத்தில் இருந்த ஜிம்பாப்வே அணிக்கு புதிய நம்பிக்கையாக அறிமுகமானாத் பிரண்டன் டெய்லர். 2004 முதல் 2021 வரையிலான அவரது 17 வருட சர்வதே கிரிக்கெட் வாழ்க்கையில் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாகவும் இருந்து உள்ளார்.
சர்வதேச அரங்கில் அனைத்து வகை ஃபார்மேட்டுகளிலும் 283 போட்டிகளில் விளையாடி இருக்கும் பிரன்டன் டெய்லர் மொத்தம் 10 ஆயிரம் ரன்களை நெருங்கிவிட்டார். டெஸ்ட், ஒருநாள், டி20 அனைத்தையும் சேர்த்து 17 சதங்களையும், 51 அரை சதங்களை அடித்து ஜிம்பாப்வே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாவே ஜொலித்திருக்கிறார் பிரண்டன் டெய்லர். இதில் குறிப்பாக 203 ஒருநாள் போட்டிகளில் 11 சதங்கள், 39 அரை சதங்களுடன் மொத்தம் 6684 ரன்களை எடுத்து உள்ளார். இதில் அதிகபட்சமாக 145 ரன்களை ஒரு போட்டியில் அடித்து உள்ளார். அணியின் பகுதிநேர பந்துவீச்சாளராகவும் செயல்பட்ட டெய்லர் 21 போட்டிகளில் பந்துவீசி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 6 சதம், 12 அரை சதங்களுடன் சேர்த்து 2,320 ரன்களை எடுத்துள்ளார். இவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 171. 4 போட்டிகளில் மட்டும் பந்துவீசிய அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
அதே போல், 44 டி20 போட்டிகளில் விளையாடி 5 அரை சதங்களுடன் 859 ரன்களை எடுத்து இருக்கிறார் டெய்லர். ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளார். அயர்லாந்துக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியே பிரெண்டன் டெய்லரின் கடைசி போட்டியாகும். ஆனால், இதில் 7 ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார் அவர். ஜிம்பாப்வே அணியும் அயர்லாந்திடம் தோல்வியடைந்தது. மழை காரணமாக போட்டியின் ஓவர் 34 ஆக குறைக்கப்பட்ட டி/எல் முறைப்படி அயர்லாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.