![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Telangana Election: 'தெலங்கானாவில் காங்கிரஸ் 20 இடங்களில்தான் வெற்றி பெறும்' - அடித்துச் சொல்லும் கே.சி.ஆர்.
K Chandrashekar Rao: மக்களை ஏமாற்றிய வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார் தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ்.
![Telangana Election: 'தெலங்கானாவில் காங்கிரஸ் 20 இடங்களில்தான் வெற்றி பெறும்' - அடித்துச் சொல்லும் கே.சி.ஆர். Telangana Election CM K Chandrashekar Rao said Will Return With Bigger Mandate, Congress Will Get Less Than 20 Seats Telangana Election: 'தெலங்கானாவில் காங்கிரஸ் 20 இடங்களில்தான் வெற்றி பெறும்' - அடித்துச் சொல்லும் கே.சி.ஆர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/14/c68848c0e4357a53bc85822e7cb9b3261699955682116865_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவில் அடுத்த ஆண்டு பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் கட்சி வட்டத்தில் தகவல் வெளியேனதால் இந்தியா முழுவதும் உள்ள பல கட்சிகள் தேர்தல் பணியில் களமிறங்கினர்.
5 மாநிலத் தேர்தல்:
குறிப்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் திமுக உள்ளிட்ட மொத்தம் 28 கட்சிகள் இடம் I.N.D.I.A என்ற கூட்டணியை ஏற்படுத்தி தேர்தலைச் சந்திக்க தயாராகினர். ஆனால் மணிப்பூர் கலவரம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ஆங்கு ஆட்சியில் உள்ள பாஜக-விற்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக-விற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதால் பாராளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டே நடத்தலாம் என டெல்லி வட்டாரங்கள் முடிவு செய்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படுகின்றது. மத்திய பிரதேசம், சண்டிகர், தெலுங்கானா, மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள்தான் அவை. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. தெலுங்கானாவில் வரும் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்போம்:
பாரதி ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் இன்று நடைபெற்ற பிரச்சாரத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த காலத்தை விட சிறந்த பெரும்பான்மையுடன் தனது கட்சி ஆட்சிக்கு வரும் என்றும், மொத்தமுள்ள 119 இடங்களில் காங்கிரசுக்கு 20க்கும் குறைவான இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், காங்கிரஸில் ஒரு டஜன் முதல்வர் வேட்பாளர்கள் இருப்பதாகக் கூறி அந்த கட்சியை கிண்டல் செய்தார்.
20க்கும் குறைவான இடங்கள்தான் பெறும்:
மேலும், "காங்கிரஸ் வெற்றி பெறப்போவதில்லை போவதில்லை. நான் உங்களுக்கு உத்தரவாதத்துடன் சொல்கிறேன். காங்கிரஸுக்கு இந்த முறை 20-க்கும் குறைவான இடங்களில்தான் வெற்றி பெறும்” என்றார்.
கடந்த காலத்தில் பெற்றதை விட ஓரிரு இடங்கள் அதிகம் பெற்று சிறப்பான பெரும்பான்மையுடன் பிஆர்எஸ் அரசு அமைக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களை ஏமாற்றிய வரலாறு காங்கிரஸுக்கு இருப்பதாக குற்றம் சாட்டினார். 2014ல் தெலுங்கானா உருவாவதற்கு முன் பிரிக்கப்படாத ஆந்திராவை ஆட்சி செய்த காங்கிரஸால் போதிய குடிநீர் மற்றும் பாசன நீர் வழங்குவதை உறுதி செய்ய முடியவில்லை. மாறாக, 2014 முதல் பிஆர்எஸ் ஆட்சியின் போது, தெலுங்கானா மாநிலம் தனிநபர் வருமானத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதன் மூலம் விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது, என்றார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நலன்புரி ஆட்சியான 'இந்திரம்மா ராஜ்ஜியத்தை' மீண்டும் கொண்டுவருவதாக காங்கிரஸ் தலைவர்கள் உறுதியளிக்கிறார்கள், ஆனால் அந்த காலகட்டம் எமர்ஜென்சியால்தான் நிரம்பி இருந்தது, மேலும் தலித்துகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார். சுதந்திரத்திற்குப் பிறகு, 'தலித் பந்து' போன்ற பிஆர்எஸ் அரசின் நலத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட்டிருந்தால், தலித்துகள் ஏழைகளாக இருந்திருப்பார்களா? என்றும் சந்திரசேகர ராவ் கேட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)