FIFA WORLDCUP 2022: நெய்மர் இல்லாமல் களமிறங்கும் பிரேசில்; அடுத்த சுற்றை உறுதி செய்வாரா ரொனால்டோ? இன்றைய போட்டிகள் இவைதான்..
FIFA WORLDCUP 2022:உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்றைக்கு 4 போட்டிகள் நடக்கின்றன. குரூப் ஜி, ஹெச் ஆகிய குரூப்களுக்குள் இன்று போட்டிகள் நடக்கவுள்ளன.
FIFA WORLDCUP 2022:உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்றைக்கு 4 போட்டிகள் நடக்கின்றன. குரூப் ஜி, ஹெச் ஆகிய குரூப்களுக்குள் இன்று போட்டிகள் நடக்கவுள்ளன.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் 29 நாட்களுக்கான திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தாரும், ஈகுவடாரும் மோதின. அந்த ஆட்டத்தில் ஈகுவடார் 0-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது. இன்று ஒரே நாளில் 4 ஆட்டங்கள் நடக்கின்றன. ஏற்கனவே கடந்த வாரத்தில் செனகலுடன் நடந்த போட்டியில் கத்தார் அடைந்த தோல்வியால் கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் இருந்து முதல் அணியாக வெறியேறியது. அதேபோல் பிரான்ஸ் அணி டென்மார்க் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்றைய போட்டிகள்
இன்றைக்கு மொத்தம் 4 போட்டிகள் நடைபெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டி என்றால் அது இரவு 9.30 மணிக்கு பிரேசில் சுவிட்சர்லாந்து அணிக்கு இடையிலான போட்டி, மற்றும் நள்ளிரவு 12.30 மணிக்கு போர்சுக்கல் உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டிதான்.
குரூப் ஜி
கேமரூன் (43) - செர்பியா (21) மாலை 3.30 மணி
பிரேசில் (1) - சுவிட்சர்லாந்து (15) இரவு 9.30 மணி
குரூப் எஃப்
தென்கொரியா (28) - கானா (61) மாலை 6.30 மணி
போர்ச்சுக்கல் (9) - உருகுவே (14) நள்ளிரவு 12.30 மணி
பிரேசில் (1) - சுவிட்சர்லாந்து (15) இரவு 9.30 மணி
இந்த போட்டியானது 974 மைதானத்தில் இரவு 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் பிரேசில் அணியின் நட்சத்திர நாயகன் நெய்மர் விளையாடுவது சந்தேகம் தான் என கூறப்பட்டு வருகிறது. கடந்த போட்டியில் அவருக்கு காலில் ஏற்ப்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இன்று நடக்கும் போட்டியின் முடிவைப் பொறுத்துதான் அவர் கேமருன் உடனான அடுத்த போட்டியில் நெய்மர் களமிறங்குவது குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் பிரேசில் வெற்றிபெற்றால் பிரேசில் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டியில் பிரேசில் அணியே வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நேருக்கு நேர்
மொத்த போட்டிகள் - 9
பிரேசில் வெற்றி - 3
சுவிட்சர்லாந்து வெற்றி- 2
டிரா - 4
போர்ச்சுக்கல் (9) - உருகுவே (14) நள்ளிரவு 12.30 மணி
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு லூசைல் மைதானத்தில் தொடங்கும் இந்த போட்டியானது, போர்ச்சுக்கல் அணி தனது அடுத்த சுற்றை முடிவு செய்யக்கூடிய போட்டியாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதுவரை இரு அணிகளும் மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. உருகுவே அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.