FIFA World Cup 2022 : FIFA உலகக்கோப்பை 2022.. கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள 5 அணிகள்..
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) உலகக் கோப்பை 2022 இன்னும் இரு வாரங்களில் கத்தாரில் தொடங்கவுள்ளது. வெல்ல வாய்ப்புள்ள டாப் 5 அணிகளின் பட்டியலை பந்தயங்கள் நடத்தும் புக்கிகள் வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) உலகக் கோப்பை 2022 இன்னும் இரு வாரங்களில் கத்தாரில் தொடங்கவுள்ளது.
நவம்பர் 20-ஆம் தேதி உலகக் கோப்பை கால்பந்து தொடங்குகிறது. இந்நிலையில், கால்பந்தாட்ட ரசிகர்கள் தங்கள் நாட்டு அணி தான் ஜெயிக்கும் என்று ஆருடம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆட்டத்தின்போது பந்தயம் கட்டும் புக்கி (bookie) இந்த அணிகள் தான் ஜெயிக்கும் என்று கணிப்பை வெளியிட்டுள்ளன.
அந்த அணிகளின் பட்டியலைப் பார்ப்போம்.
ஸ்பெயின்
லா ஃப்யூரியா ரோஜா அல்லது த ரெட் ஃபியூரி ஆகிய புனைப் பெயர்களில் ரசிகர்களால் அழைக்கப்படும் ஸ்பெயின் அணி, இந்த முறை கோப்பையைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2010ஆம் ஆண்டு ஸ்பெயின் அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து
2018ஆம் ஆண்டு யூரோ கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணி பைனில் தோற்றது. வெல்ல வாய்ப்புள்ள இந்தப் பட்டியலில் இங்கிலாந்தும் பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி 1966 ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்றது.
பிரான்ஸ்
பிரான்ஸ் அணி 1998 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை முத்தமிட்டது.
அர்ஜென்டீனா
1978, 1986 ஆகிய ஆண்டுகளில் அர்ஜென்டீனா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த முறை இந்த அணியும் வெற்றி பெறும் என்று புக்கி கணித்துள்ளனர்.
Rohit Sharma: பயிற்சியின்போது காயம்: அரையிறுதியில் அணியை வழிநடத்துவரா ரோகித் சர்மா...?
பிரேசில்
கால்பந்து என்றால் பிரேசில் பிரேசில் என்றால் கால்பந்து என்னும் அளவுக்கு இருக்கும் அந்த அணி இந்தப் பட்டியலில் இடம்பெறாமல் போகுமா என்ன? பிரேசில் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றது. இந்த முறை அந்த அணியும் வெல்ல வாய்ப்புள்ளதாக புக்கிகள் கணித்துள்ளனர்.
முன்னதாக, இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பீர் விற்பனை செய்ய கத்தார் அரசு முடிவு செய்துள்ளது.
Six nations.
— FIFA World Cup (@FIFAWorldCup) October 24, 2022
Six captains.
One dream.
பீர் மட்டும் விற்பனை
வருகிற நவம்பர் மாதம் FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் உள்ள மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. பொதுவாக இதுபோன்ற உலக கோப்பை போட்டிகளில் பீர் போன்ற மதுபானங்கள் விற்கப்படுவது வழக்கம் . ஆனால் அரேபிய நாடுகள் சில இவ்வகையான போதை பொருட்களுக்கு எதிரானது. எனவே கத்தார் மைதானத்தில் ஆல்கஹால் நிறைந்த பீர் போன்ற போதை பானங்கள் விற்பனைக்கென எவ்வித ஏற்பாடுகளையும் செய்யாமல் இருந்தது. இந்த நிலையில் பீர் மட்டும் விற்பனை செய்துக்கொள்ள சில கால அவகாசங்களை அந்நாடு வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் பீர் வகை மதுபானத்தை மட்டும் பெற்றுக்கொள்ள பட்வைசர் பீர் நிறுவனத்துடன் கத்தார் அரசு ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் கேட் திறந்ததும் போட்டி வங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக பீர் விற்பனை மைதானத்திற்குள் துவங்கும். அதே போல போட்டி நிறைவடைந்து ஒரு மணி நேரம் வரையில் பீர் விற்பனை செய்யப்படு என கூறப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் போட்டியின் ஒவ்வொரு நாளும் மாலை 6:30 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை மத்திய டோஹாவில் உள்ள ஃபேன் ஸோனில் பீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் போட்டியின் போது மைதானத்தில் பீர் வழங்கப்படாது.இதே விதிமுறைகள்தான் மற்ற உலக கோப்பை போட்டிகளுக்கும் என்கின்றனர் சிலர்.