மேலும் அறிய

Metro Train Free Travel : CSK- MI போட்டியை பார்க்கப்போறீங்களா.! மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்- சூப்பர் அறிவிப்பு

Metro Train Free Travel : சென்னையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள சிஎஸ்கே- மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பை கொடுத்ததையடுத்து சென்னையில் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டியை பார்க்கவரும் ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சென்னையில் ஐபிஎல் போட்டி

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் CSK Cricket Limited நிறுவனத்துடன் இணைந்து “IPL 2026" லீக் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்காக, பிரத்யேக மெட்ரோ பயணங்களை வழங்க முன்வந்துள்ளது. அந்த வகையில் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI), அணிகள் இடையிலான IPL 2026 லீக் போட்டி எண் 44, வருகின்ற. 02 மே 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக ரசிகர்களுக்கு ஸ்பான்சர் பயணங்களும், கூடுதல் மெட்ரோ ரயில்களும் இயக்கப்படவுள்ளது. 

 ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் பயணச்சீட்டுகளில் (both Digital & Physical) உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். சென்னையில் செயல்பாட்டில் உள்ள எந்த மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிஎஸ்கே போட்டி - மெட்ரோ ரயில் இலவச பயணம்

மே 02, 2026 அன்று CSK மற்றும் MI அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து நீட்டிக்கப்பட்ட சிறப்பு மெட்ரோ இரயில் சேவை குறித்த விவரங்கள்:

  • அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலைய மெட்ரோ நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 01:00 மணிக்கு புறப்படும்.
  • பச்சை வழித்தடத்தில் (வழித்தடம் 2) உள்ள மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் மட்டுமே வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம்.

பயணிகள் கடைசி மெட்ரோ இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

IPL 2027: ஐபிஎல் மினி ஏலம் எப்போது? இடம் மாறப்போகும் ஸ்டார் ப்ளேயர்கள்! வீரர்களை அள்ளத் தயாராகிய அணிகள்!
IPL 2027: ஐபிஎல் மினி ஏலம் எப்போது? இடம் மாறப்போகும் ஸ்டார் ப்ளேயர்கள்! வீரர்களை அள்ளத் தயாராகிய அணிகள்!
கோல் ஊன்றித் தாண்டுதலில் சரித்திரம் படைத்த தமிழச்சி: சொந்த ஊரில் பரணிகா இளங்கோவனுக்கு உற்சாக வரவேற்பு!
கோல் ஊன்றித் தாண்டுதலில் சரித்திரம் படைத்த தமிழச்சி: சொந்த ஊரில் பரணிகா இளங்கோவனுக்கு உற்சாக வரவேற்பு!
IND vs WI: இரக்கமே இல்லாமல் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோப் செஞ்சுரி..! 248 ரன்களை எட்டுமா இந்தியா?
IND vs WI: இரக்கமே இல்லாமல் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோப் செஞ்சுரி..! 248 ரன்களை எட்டுமா இந்தியா?
Natarajan: நட்டை கழட்ட வரப்போகும் நட்ராஜன்..! SRH-க்கு கம்பேக் கொடுக்கும் தமிழக புயல்!
Natarajan: நட்டை கழட்ட வரப்போகும் நட்ராஜன்..! SRH-க்கு கம்பேக் கொடுக்கும் தமிழக புயல்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget