மேலும் அறிய

ZIM vs AFG: ஒரே டெஸ்ட்டில் 4 சதங்கள், 2 இரட்டை சதங்கள்! போட்டி போட்டு ஆப்கன் - ஜிம்பாப்வே ரன்மழை!

ஜிம்பாப்வே ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணியில் இருந்தும் 4 சதங்கள் மற்றும் 2 இரட்டை சதங்கள் விளாசப்பட்டுள்ளது.

இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டித் தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை இந்திய அணி பறிகொடுத்துள்ளது. இந்த தொடரில் இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் இரு அணிகளும் ஒன்றும் போட்டி போட்டு ரன்களை குவிக்கவில்லை. 

ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான்

ஆனால், கிரிக்கெட் உலகில் அறிமுகமாகிய சில ஆண்டுகளிலேயே டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கும், நீண்ட ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடும் ஜிம்பாப்வே அணிக்கும் இடையேயான  டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

ஜிம்பாப்வே நாட்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்செய்த ஜிம்பாப்வே அணிக்காக சீன் வில்லியம்ஸ் 154 ரன்கள் விளாச,  கேப்டன் கிரெக் எர்வின் 104 ரன்கள் எடுக்க, ப்ரையன் பென்னெட்டும் 110 ரன்கள் என ஜிம்பாப்வே அணி 586 ரன்கள் விளாசியது.

முதல் இன்னிங்சில் இமாலய ரன்களை குவித்த ஜிம்பாப்வே அணி ஆப்கன் விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று எண்ணியது. தொடக்க வீரர் அடல் 3 ரன்களிலும், அப்துல் மாலிக் 23 ரன்களிலும் அவுட்டாக அடுத்து வந்த ரஹமத் - கேப்டன் ஷாகிதி ஜோடி நங்கூரம் போல நின்றனர். 

இரட்டை சதங்கள்:

அபாரமாக ஆடிய இருவரும் சதம் விளாசினார். சதம் விளாசிய பிறகும் பவுண்டரிகளாக விளாசினார். இவர்களைப் பிரிக்க கேப்டன் கிரெக் எர்வின் எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. சதம் விளாசி அசத்திய ரஹமத் இரட்டை சதம் விளாசினார். 64 ரன்களில் சேர்ந்த இந்த ஜோடி 428 ரன்களில்தான் பிரிந்தது. இரட்டை சதம் விளாசிய ரஹமத் 424 பந்துகளில் 23 பவுண்டரி 3 சிக்ஸருடன் 234 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

அடுத்து வந்த ஷஷாயும் ஜிம்பாப்வே அணியைச் சோதித்தார். அவரும் ஜிம்பாப்வே பந்துவீச்சைச் சிதைக்க மறுமுனையில் கேப்டன் ஷாகிதி இரட்டை சதம் விளாசினார். அவர் இரட்டை சதம் விளாசிய சிறிது நேரத்தில் ஷஷாய் சதம் அடித்தார்.  சிறப்பாக ஆடிய ஷஷாய் ஆப்கானிஸ்தான் 639 ரன்கள் எடுத்தபோது 113 ரன்களில் அவுட்டானார். 

டிராவை நோக்கி:

பின்னர் 250 ரன்களை நோக்கிச் சென்று கொண்டிருந்த  ஷாகிதி 246 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் 474 பந்துகளில் 21 பவுண்டரியுடன் 246 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 197 ஓவர்களில் 699 ரன்களுக்கு அவுட்டானது. 

இந்த போட்டியின் கடைசி நாளான இன்று ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி இரண்டாவது இன்னிங்சில் ஆடி வருகிறது. இந்த போட்டி டிராவை நோக்கிச் செல்லும் நிலையில், ஒரே டெஸ்ட் போட்டியில் 4 சதங்கள் மற்றும் இரண்டு இரட்டைச் சதங்கள் விளாசப்பட்டதற்கு பேட்ஸ்மேன்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.  ஜிம்பாப்வேயை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தி ஆப்கன் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் ஆடி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!Manmohan Singh Death | நவீன இந்தியாவின் சிற்பி.. மன்மோகன் சிங் காலமானார் | CongressAnna University Rape Issue | ”யார் அந்த சார்?”EA MALL-ல் நடந்தது என்ன? தமிழகத்தை அதிரவிடும் போஸ்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
பூசாரிக்கு ரூ. 18,000.. Soft இந்துத்துவாவை கையில் எடுத்த கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு செக்!
பூசாரிக்கு ரூ. 18,000.. Soft இந்துத்துவாவை கையில் எடுத்த கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு செக்!
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
பரபரப்பான மதுரை... செல்லூர் ராஜூ கைது
பரபரப்பான மதுரை... செல்லூர் ராஜூ கைது
Embed widget