அவர் தான் சொன்னாரா! தோனியை திடீரென பாரட்டிய யுவராஜ் தந்தை.. காரணம் என்ன?
Yograj Singh : யோக்ராஜ் சிங் "தோனி மிகவும் ஊக்கமளிக்கும் கேப்டனாக நான் காண்கிறேன், அவர் என்ன செய்ய வேண்டும் என்று வீரர்களுக்கு சொல்ல முடியும் என்று பாராட்டி இருந்தார்

யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்ராஜ் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ் தோனியை திடீரென பாராட்டியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
யோக்ராஜ் சிங்:
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், எப்போதும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை திட்டி தீர்ப்பதை தனது வாடிக்கையாக வைத்திருப்பவர். தன் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை வீணாக்கியது தோனி தான் என்று சென்ற வருடம் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ”கபில் தேவ் தலைக்கு புல்லட்” துப்பாக்கியுடன் சென்ற யுவராஜ் சிங் தந்தை! நடந்து என்ன?
அந்த பேட்டியில் அவர் பேசியதாவது, “தோனியை நான் மன்னிக்க மாட்டேன்.. அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் மிகப் பெரிய கிரிக்கெட் வீரர், ஆனால் என் மகனுக்கு எதிராக அவர் செய்தது எல்லாம் இப்போது வெளிவருகிறது; அதை வாழ்நாளில் மன்னிக்க முடியாது. வாழ்க்கையில் இரண்டு விஷயங்களைச் செய்ததில்லை - முதலில், எனக்கு தவறு செய்த யாரையும் நான் மன்னிக்கவில்லை, இரண்டாவதாக, என் குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, என் குழந்தைகளாக இருந்தாலும் சரி, அவர்களை என் வாழ்க்கையில் கட்டிப்பிடித்ததில்லை " என்று யோகராஜ் பேட்டியில் தோனியை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
இதையும் படிங்க: IPL 2025 Schedule: நாள் குறிச்சாச்சு! அனல் பறக்கும் ஐபிஎல் பைனல் எப்போது? எங்கு?
தோனியை திடீரென பாராட்டிய யோக்ராஜ் சிங்:
இந்த நிலையில் யோக்ராஜ் சிங் தோனியை பாராட்டி தள்ளியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது "தோனி மிகவும் ஊக்கமளிக்கும் கேப்டனாக நான் காண்கிறேன், அவர் என்ன செய்ய வேண்டும் என்று வீரர்களுக்கு சொல்ல முடியும். தோனியின் சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் விக்கெட்டைப் படித்து பந்துவீச்சாளர்களுக்கு எங்கு பந்து வீச வேண்டும் என்று சொல்ல முடியும். அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அவர் ஒரு அச்சமற்ற மனிதர்.
I like dhoni, he was fearless: Yograj Singh pic.twitter.com/GDvmYKWc3Y
— GUY (@OLDTWEETGUY) January 12, 2025
2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில், மிட்செல் ஜான்சன் வீசிய பந்து தோனியின் ஹெல்மெட் கிரில்லில் அடிபட்டு, ஆனால் சிறிதும் அசையாமல், அங்கேயே நின்று, அடுத்த பந்திலேயே, சிக்ஸர் அடித்துக்காட்டினார். இப்படி விளையாட ஒரு சிலரால் மட்டுமே முடியும் என்று யோக்ராஜ் சிங் தோனியை பாராட்டியுள்ளார்.





















