மேலும் அறிய

WTC Final India Squad: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; இந்திய அணி அறிவிப்பு - கம்பேக் கொடுத்த ரஹானே..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியை , சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் ரகானே திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக அதிரடியாக ஆடி வருகிறார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடரை இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி கைப்பற்றியது. அதைதொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 9 அணிகள் பங்கேற்றன. தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. 

இறுதிப்போட்டி எப்போது?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஜுன் மாதம் 7ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அணியை ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் அறிவித்த நிலையில், தற்போது இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக 15 மாதங்களுக்குப் பிறகு ரகானேவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக நடுகள வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் உலக டெஸ்ட் சாம்பின்ஷிப்பில் இருந்து விலகியுள்ள நிலையில், அவர்களுக்கு மாற்றாக ரகானே மற்றும் ராகுலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கம்பேக் கொடுத்த ரகானே:

இந்திய அணிக்காக முக்கிய டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக விளங்கிவந்த ரகானே ஃபார்ம்-அவுட் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதைதொடர்ந்து, கடந்தாண்டு ஜனவரிக்கு பிறகு இந்திய அணிக்காக எந்தவொரு போட்டியிலும் அவர் விளையாடவில்லை. இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரகானே, அட்டகாசமான ஃபார்மில் உள்ளார். அதிரடியாக ரன் குவித்து வரும் அவரது ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து, 15 மாதங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் ரகானே மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

மீண்டும் கே. எல். ராகுல்:

மோசமான பேட்டிங் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கே. எல். ராகுல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் நீக்கப்பட்டார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் சற்று சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான், இந்திய அணியில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்: ரோகித்சர்மா(கேப்டன்), விராட்கோலி, சுப்மன்கில், கே.எல்.ராகுல்,கே.எஸ்.பரத், அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ்யாதவ், ஜெய்தேவ் உனத்கட், புஜாரா, ரஹானே

ஆஸ்திரேலிய அணி விவவரம்: கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஹேசல்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், கவாஜா, லபுசக்னே,  லயன், மிட்ஷெல் மார்ஷ், மர்பி, ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க்,  டேவிட் வார்னர்

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget