WTC 2023-25:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - புதுப்பிக்கப்பட்ட அட்டவணை வெளியீடு! இந்தியா அணி எந்த இடம்?
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023-25 புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023-25 புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் இந்தியா:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது.
இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் மாயஜால சுழலில் வங்கதேச அணி சுருண்டது. அதன்படி இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் புள்ளிகள் சதவீதம் (PCT) 71.66 ஆக அதிகரித்தது, 10 டெஸ்டில் இருந்து 86 புள்ளிகளைக் குவித்தது. இந்தியா இப்போது இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை விட 9.16 சதவீத புள்ளிகளால் முன்னிலை பெற்றுள்ளது.
மறுபுறம், வங்கதேசம் தோல்வியைத் தொடர்ந்து நான்காவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு வீழ்ந்துள்ளது, அவர்களின் PCT 45.83 இலிருந்து 39.28 ஆக குறைந்துள்ளது. வங்கதேச அணியின் தோல்வியால் இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா ஒரு இடம் முன்னேறியுள்ளன.
India consolidated their advantage at the top of #WTC25 standings with a comprehensive win in Chennai 💪#INDvBAN 📝: https://t.co/giMNVpnYwv pic.twitter.com/BHlzqHq9ey
— ICC (@ICC) September 22, 2024
இந்நிலையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023-25 புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.
WTC 2023-25 புதுப்பிக்கப்பட்ட புள்ளிகள் அட்டவணை:
நிலை |
அணிகள் |
போட்டிகள் |
வெற்றி |
தோல்வி |
டிரா |
NR |
புள்ளி |
PCT |
1 |
இந்தியா |
10 |
7 |
2 |
1 |
0 |
86 |
71.67 |
2 |
ஆஸ்திரேலியா |
12 |
8 |
3 |
1 |
0 |
90 |
62.5 |
3 |
நியூசிலாந்து |
6 |
3 |
3 |
0 |
0 |
36 |
50 |
4 |
இலங்கை |
7 |
3 |
4 |
0 |
0 |
36 |
42.86 |
5 |
இங்கிலாந்து |
16 |
8 |
7 |
1 |
0 |
81 |
42.19 |
6 |
வங்கதேசம் |
7 |
3 |
4 |
0 |
0 |
33 |
39.29 |
7 |
தென்னாப்பிரிக்கா |
6 |
2 |
3 |
1 |
0 |
28 |
38.89 |
8 |
பாகிஸ்தான் |
7 |
2 |
5 |
0 |
0 |
16 |
19.05 |
9 |
வெஸ்ட் இண்டீஸ் |
9 |
1 |
6 |
2 |
0 |
20 |
18.52 |
மேலும் படிக்க: Watch Video: "கடவுளே அஜித்தே" சேப்பாக்கம் மைதானத்தை அதிரவிட்ட ரசிகர்கள் - நீங்களே பாருங்க!