மேலும் அறிய

WPL Auction 2023:இறுதிப்பட்டியலில் 409 பேர்.. அதிருஷ்டசாலி 90 பேர் யார்?.. மகளிர் பிரீமியர் லீக் தொடங்குவது எப்போது?

WPL Auction 2023: மகளிர் ஐபிஎல் ஏலத் தேதி மற்றும், போட்டி தொடங்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரசிகர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, நடப்பாண்டு முதல் மகளிர் பிரீமியர் லீக் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதற்கான அணிகளின் ஏலம் மற்றும் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் ஆகியவை ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில், வீராங்கனைகளுக்கான ஏலம் மற்றும் தொடர் தொடங்கும் தேதி ஆகியவை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

போட்டி அட்டவணை:

அதன்படி, ஆடவர்களுக்கான ஐபிஎல் தொடரை போன்று முதல்முறையாக நடைபெற உள்ள மகளிருக்கான பிரீமியர் லீக்கில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன. மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரையில் மும்பையில் இந்த தொடர் நடைபெற உள்ளது. இதில் மொத்தமாக 22 போட்டிகள் நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து போட்டிகளும் பர்போன் மற்றும் டி. ஓய். பட்டேல் ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது.

வீராங்கனைகளுக்கான ஏலம்:

மகளிர் பிரீமியர் லீக் தொடர்பான அறிவிப்பு வெளியானதுமே இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாட்டு வீராங்கனைகளுமே பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதையடுத்து, தொடரில் பங்கேற்பதற்கான முன்பதிவிலும் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக வெறும் 90 பேர்களுக்கான ஏலத்தில் பங்கேற்க, 1525 பேர் முன்பதிவு செய்தனர். அதிலிருந்து ஏலத்தில் பங்கேற்க 409 பேர் அடங்கிய பெயர் பட்டியலை பிசிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில், 246 பேர் இந்தியர்கள், 163 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவர்.  இதில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் 202 பேர், சர்வதேச போட்டிகளில் விளையாடதவர்கள் 199 பேர் மற்றும் 8 பேர் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து அணிகளுக்கு அதிகபட்சமாக 90 இடங்கள் உள்ளன. அதில்.  30 வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏலத்தொகை விவரங்கள்

வீராங்கனைக்ளுக்கான அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் மொத்தம் 24 பேர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா மற்றும் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட டி20 உலகக் கோப்பை வென்ற கேப்டன் ஷஃபாலி வர்மா என 10 பேர் இடம்பெற்றுள்ளனர். அதோடு, எல்லிஸ் பெர்ரி, சோஃபி எக்லெஸ்டோன், சோஃபி டிவைன் & டீன்ட்ரா டோட்டின் ஆகிய 14 வீராங்கனைகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதற்கடுத்தபடியாக, அடிப்படி ஏலத்தொகையான 40 லட்ச ரூபாய் பட்டியலில் 30 வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று ரூ.20 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் எனும் அடிப்படை ஏலத்தொகை பிரிவுகளிலும் வீராங்கனைகள் ஏலத்தில் விடப்பட உள்ளனர். 

ஏலம் நடைபெற உள்ள தேதி:

5 அணிகளுக்காக விளையாட உள்ள வீராங்கனைகளுக்கான ஏலம், வரும் 13ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget