மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
MI-W vs GG-W, Match Highlights: யாராலும் வெல்ல முடியாத மும்பை; இந்த முறையும் குஜராத்தை ஓடவிட்டு 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
WPL 2023, MI-W vs GG-W: மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணிக்கு எதிரான போட்டியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது,
யாராலும் வெல்ல முடியாத மும்பை; இந்த முறையும் குஜராத்தை ஓடவிட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, களமிறங்கிய மும்பை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரின் நான்காவது பந்தில் மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூஸ் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். குஜராத் அணி சிறப்பாக பந்து வீசியாதால், மும்பை அணி ரன் எடுக்க திண்றியது. பவர்ப்ளேவில் மும்பை அணியால் 50 ரன்களைக் கூட எடுக்க முடியவில்லை. மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து நிதானமாக ஆடிவந்த மும்பை அணி, 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்து இருந்தது. அதன் பின்னர் அதிரடி காட்டிய யாஸ்திகா மற்றும் ஷிவர் பர்ண்ட் பந்துகளை தொடர்ந்து பவுண்டரிக்கு விரட்ட ஆரம்பித்தனர். ஆனால் இந்த அதிரடி தொடர்ந்து நீடிக்கவில்லை. சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணி மும்பை அணியை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்தது. இறுதியில் மும்பை அணியை அந்த அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பாக விளையாடி மும்பை அணியை 150 ரன்களைக் கடக்க வைத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. 20வது ஓவரின் நான்காவது பந்தில் ஹர்மர்ப்ரீத் கவுர் 51 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் அடுத்த பந்திலும் குஜராத் அணி ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு மிகவும் மோசமான பவர்ப்ளே காத்திருந்தது. குஜராத் அணியின் டங்க்ளி மும்பை அணியின் ஷிவர் பர்ண்ட் வீசிய முதல் பந்திலேயே எல்.பி.டபள்யூ ஆகி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பவர்ப்ளேயின் கடைசி ஓவரை மேத்யூஸ் வீச, அந்த ஓவரின் இரண்டாவது பந்திலும், கடைசி பந்திலும் குஜராத் அணி இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அதன் பின்னர் நிதானமாக குஜராத் அணி ஆடிவந்தது. 9 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்த ஓவரின் கடைசி பந்தில் நிதானமாக ஆடி வந்த ஹெர்லின் எல்.பி.டபள்யூ முறையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் 10வது ஓவரின் முதல் பந்தில் கார்ட்னர் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதனால் குஜராத் அணிக்கு நெருக்கடி அதிகமானது.
அதன் பின்னர் குஜராத் அணியை தோல்வியின் விகிதத்தினை குறைக்க போராடிய அந்த அணியின் கேப்டன் ராணா 14.5 வது ஓவரில் ஷிவர் பர்ண்ட்டிடம் எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார்.
இறுதி 5 ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 75 ரன்கள் தேவை என்ற நெருக்கடி நிலையில் இருந்தது. ஆனால் இது அந்த அணி கடந்த 15 ஓவர்களில் அடித்த ரன்னுக்கு கிட்டத்தட்ட நிகரானது. மும்பை அணி சிறப்பாக பந்து வீசியதால், குஜராத் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியாமல், தோல்வி விகிதத்தினை மட்டுமே குறைக்க முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இதனால், மும்பை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion