World Cup Points Table: அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நெதர்லாந்து.. புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடம்.. புள்ளிப்பட்டியல் நிலவரம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வியின்மூலம், நெதர்லாந்து அணி உலகக் கோப்பை 2023ல் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்ட மூன்றாவது அணியானது.
உலகக் கோப்பை 2023ல் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இறுதியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் 40வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. இந்த தோல்வியின்மூலம், நெதர்லாந்து அணி உலகக் கோப்பை 2023ல் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்ட மூன்றாவது அணியானது.
அதேசமயம் இந்த வெற்றியின்மூலம் இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்து, 2025 சாம்பியன் டிராபிக்கான போட்டியில் தன்னை தக்க வைத்து கொண்டது. நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த நெதர்லாந்து அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது.
புள்ளிப்பட்டியல் அட்டவணை:
தரவரிசை | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ரன் ரேட் |
1. இந்தியா (தகுதி) | 8 | 8 | 0 | 16 | +2.456 |
2. தென்னாப்பிரிக்கா (தகுதி) | 8 | 6 | 2 | 12 | +1.376 |
3. ஆஸ்திரேலியா (தகுதி) | 8 | 6 | 2 | 12 | +0.861 |
4. நியூசிலாந்து | 8 | 4 | 4 | 8 | +0.398 |
5. பாகிஸ்தான் | 8 | 4 | 4 | 8 | +0.036 |
6. ஆப்கானிஸ்தான் | 8 | 4 | 4 | 8 | -0.338 |
7. இங்கிலாந்து (வெளியே) | 8 | 2 | 6 | 4 | -0.885 |
8. வங்கதேசம் (வெளியே) | 8 | 2 | 6 | 4 | -1.142 |
9. இலங்கை (வெளியே) | 8 | 2 | 6 | 4 | -1.160 |
10. நெதர்லாந்து (வெளியே) | 8 | 2 | 6 | 4 | -1.635 |
நான்காவது அணியாக அரையிறுதிக்கு யார் தகுதி..?
பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி ஏற்கனவே உலகக் கோப்பை 2023ல் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், நெதர்லாந்து அணியையும் நேற்றைய போட்டியில் தோற்கடித்து இங்கிலாந்து அணி வெளியேறியது. இதுபோன்ற சூழ்நிலையில், நான்காவது அணியாக அரையிறுதிக்கு தகுதிபெறும் அணி எது என்பது மட்டுமே இன்னும் எதிர்பார்ப்பை கூட்டுகிறது. இதுவரை இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடத்தும் இந்தியா முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் தகுதி பெற்றுள்ளன. நான்காவது இடத்துக்கான போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது.
நியூசிலாந்து 8 புள்ளிகள் மற்றும் நிகர ரன்ரேட் +0.398 உடன் நான்காவது இடத்தில் உள்ளது. இதற்குப் பிறகு, பாகிஸ்தான் 8 புள்ளிகள் மற்றும் நிகர ரன்ரேட் +0.036 உடன் ஐந்தாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 8 புள்ளிகள் மற்றும் நிகர ரன்ரேட் -0.338 உடன் ஆறாவது இடத்தில் உள்ளது . நியூசிலாந்து அணி தனது கடைசி ஆட்டத்தில் இலங்கை எதிராகவும், பாகிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராகவும், ஆப்கானிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கும் எதிராகவும் விளையாட இருக்கிறது. இந்த போட்டிகளின் முடிவை பொறுத்தே எந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் 4வது அணி என்பது தெரியவரும்.
வெளியேற்றப்பட்ட அணிகளின் நிலைமைகள்:
வெளியேறிய இங்கிலாந்து 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், வங்கதேசம் 4 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், இலங்கை 4 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், நெதர்லாந்து 4 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளன. இதுவரை மொத்தம் 4 அணிகள் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளன. இரண்டு அணிகள் இன்னும் வெளியேற்றப்படவில்லை. உலகக் கோப்பை 2023 போட்டியில் இதுவரை 40 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெற என்ன செய்ய வேண்டும்..?
முதலில், நவம்பர் 11-ம் தேதி நடைபெறும் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் தோற்கடிக்க வேண்டும். இதற்குப் பிறகு, நியூசிலாந்து தனது கடைசி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராகவும், ஆப்கானிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் தோற்க வேண்டும். இதன்மூலம், பாகிஸ்தான் அணி நான்காவது இடத்தைப் பிடித்து நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறும்.