World Cup 2023 Points Table: இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான்.. டாப் 4-க்குள் இந்தியா.. புள்ளி அட்டவணை இதோ!
பாகிஸ்தான் அணி 2023 உலகக் கோப்பையின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. நியூசிலாந்து அணி இன்னும் இங்கு முதல் இடத்தில் உள்ளது.
நேற்றிரவு 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. பாகிஸ்தானின் இந்த வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கது. ஏனென்றால், உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய வெற்றிகரமான ரன் சேஸ் செய்தது. பாகிஸ்தானுக்கு 345 ரன்கள் இலக்காக இலங்கை நிர்ணயித்திருந்தது. இதை வெற்றிகரமாக சேஸ் செய்த பாகிஸ்தான் அணி 10 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் வெற்றி பெற்றது. இந்த மறக்கமுடியாத வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி 2023 உலகக் கோப்பையின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. நியூசிலாந்து அணி இன்னும் இங்கு முதல் இடத்தில் உள்ளது.
இந்திய அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. முன்னதாக இந்திய அணி ஐந்தாவது இடத்தில் இருந்தது. ஆனால் நேற்று இங்கிலாந்திடம் வங்கதேசம் படுதோல்வி அடைந்ததால் இந்தியா டாப்-4க்குள் நுழைந்தது. இங்கு தென்னாப்பிரிக்காவும் டாப்-4க்குள் இடம்பிடித்துள்ளது.
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ரன்ரேட் |
1. நியூசிலாந்து | 2 | 2 | 0 | 4 | 1.958 |
2. பாகிஸ்தான் | 2 | 2 | 0 | 4 | 0.927 |
3. தென்னாப்பிரிக்கா | 1 | 1 | 0 | 2 | 2.040 |
4. இந்தியா | 1 | 1 | 0 | 2 | 0.883 |
5. இங்கிலாந்து | 2 | 1 | 1 | 2 | 0.553 |
6. வங்கதேசம் | 2 | 1 | 1 | 2 | -0.653 |
7. ஆஸ்திரேலியா | 1 | 0 | 1 | 0 | -0.883 |
8. இலங்கை | 2 | 0 | 2 | 0 | -1.161 |
9. ஆப்கானிஸ்தான் | 1 | 0 | 1 | 0 | -1.438 |
10. நெதர்லாந்து | 2 | 0 | 2 | 0 | -1.800 |
கடந்த 8 போட்டிகளின் முடிவுகள்:
உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 82 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் வங்கதேசம் 92 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்கா 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. ஐந்தாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 52 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆறாவது போட்டியில் இங்கிலாந்து அணி வங்கதேசத்தை 137 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக வீழ்த்தியது. எட்டாவது போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
உலகக் கோப்பை 2023ன் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் மோசமாக தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, தனது அடுத்த ஆட்டத்தில் தனது நிகர ரன் விகிதத்தை மேம்படுத்தியது. வங்கதேசத்தை அபாரமாக வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு இங்கிலாந்து அணி பிடித்தது.
நேற்றைய போட்டி சுருக்கம்:
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 344 ரன்கள் குவித்தது. அந்த அணிக்காக குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் சதம் அடித்தனர். எனினும் அவரது சதத்தால் அணிக்கு வெற்றியை பெற்றுத்தர முடியவில்லை.
ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது. உலகக் கோப்பையில் இதுவரை இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததில்லை, ஹைதராபாத்தில் நடந்த போட்டியிலும் பாகிஸ்தான் இந்த சாதனையை தக்கவைத்தது. ரன்களைத் துரத்தும்போது, முகமது ரிஸ்வான் மற்றும் அப்துல்லா ஷபிக் ஆகியோர் சதம் அடித்து விளையாடினர், இதன் காரணமாக உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மிகப்பெரிய இலக்கை (345/4) துரத்தியது. ரிஸ்வான் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 134* ரன்கள் எடுத்தார், ஷபிக் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக மதுஷங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர மகிஷ் தீக்ஷனா மற்றும் மத்திஷா பத்திரன ஆகியோர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.