மேலும் அறிய

WPL 2023: ஏலம் போகாத வீராங்கனைகள்… உலகக்கோப்பையில் கலக்கிய தருணங்கள்...மிஸ் செய்யப்பட்ட டாப்-5 யார்? யார்?

நடந்து முடிந்த மகளிர் டி20 உலகக் கோப்பையில், ஏலத்தில் விற்கப்படாத வீரர்கள் நன்றாக செயல்பட்டுள்ள நிலையில், அணி உரிமையாளர்கள் இவர்களை ஏலத்தில் எடுக்காததால் வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெண்கள் பிரீமியர் லீக் (WPL) ஏலம் மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்றது, அதில் ஸ்மிருதி மந்தனா, ஆஷ்லே கார்ட்னர், நாட் ஸ்கிவர்-பிரண்ட், தீப்தி ஷர்மா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் பெரிய தொகையை பெற்றனர். சமீபத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) WPL அட்டவணையை அறிவித்தது.

இருப்பினும், ஏலத்தில் நல்ல விலைக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் விற்கப்படாமல் சென்றனர். ஆனால் நடந்து முடிந்த மகளிர் டி20 உலகக் கோப்பையில், ஏலத்தில் விற்கப்படாத வீரர்கள் நன்றாக செயல்பட்டுள்ள நிலையில், அணி உரிமையாளர்கள் இவர்களை ஏலத்தில் எடுக்காததால் வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பட்டியலில் டாப் 5 வீராங்கனைகளை பார்க்கலாம்.

WPL 2023: ஏலம் போகாத வீராங்கனைகள்… உலகக்கோப்பையில் கலக்கிய தருணங்கள்...மிஸ் செய்யப்பட்ட டாப்-5 யார்? யார்?

  1. அயபோங்கா காக்கா

2012 முதல் விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணியின் மூத்த வீராங்கனை அயபோங்கா காக்கா அவரது பந்துவீச்சு செயல்திறன் மூலம் தனது தேசிய அணிக்காக நிறைய போட்டிகளை வென்று தந்துள்ளார். T20 சர்வதேச போட்டிகளில் (T20Is), அவர் தென்னாப்பிரிக்காவுக்காக 49 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை 6.28 எகனாமியில் கைப்பற்றியுள்ளார். பரந்த சர்வதேச மற்றும் லீக் தொடர் அனுபவம் இருந்தபோதிலும், 2023 WPL ஏலத்தில் அவரை யாரும் வாங்கவில்லை. ஆனால், மகளிர் டி20 உலகக் கோப்பையில் அவரது ஆட்டம் அனைத்து WPL உரிமையாளர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். இந்த தொடரில், 5.33 என்ற எகனாமியில் நான்கு போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவர் தனது அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெயர் பெற்றார். இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான அரையிறுதி ஆட்டத்தில், அவர் 4/29 என்ற எண்ணிக்கையில் அபாரமாக பந்து வீசி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

WPL 2023: ஏலம் போகாத வீராங்கனைகள்… உலகக்கோப்பையில் கலக்கிய தருணங்கள்...மிஸ் செய்யப்பட்ட டாப்-5 யார்? யார்?

  1. லியா தஹுஹு 

அவர் 2011 இல் நியூசிலாந்துக்காக ஆடத்துவங்கிய அவர், அவரது சிறந்த பந்துவீச்சு மூலமாக அணியின் முக்கிய வீரரானார். மகளிர் பிக் பாஷ் லீக்கில் (WBBL), அவர் இதுவரை ஆறு சீசன்களில் விளையாடி 6.12 என்ற எகனாமியில் 70 போட்டிகளில் 57 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். WPL ஏலத்தில், அவர் தனது அடிப்படை விலையான INR 30 லட்சத்தில் தனது பெயரை பதிவு செய்த நிலையில் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. அவரது அனுபவம் மற்றும் சாதனைகளைப் பார்க்கும்போது, அவர் ஒரு பெரிய தொகையில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், எந்த உரிமையாளரும் அவர் மீது ஆர்வம் காட்டாததால் அவர் ஏலத்தில் விற்கப்படாமல் போனார். உலகக்கோப்பையில் அவர் நான்காவது அதிக விக்கெட் எடுத்தவராக திகழ்ந்தார். போட்டியின் நான்கு ஆட்டங்களில், தஹுஹு 6.33 என்ற எகனாமியில் எட்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

WPL 2023: ஏலம் போகாத வீராங்கனைகள்… உலகக்கோப்பையில் கலக்கிய தருணங்கள்...மிஸ் செய்யப்பட்ட டாப்-5 யார்? யார்?

  1. சுசி பேட்ஸ்

பெண்கள் டி20 சர்வதேசப் போட்டிகளில் சுசி பேட்ஸ் அபாரமான வீராங்கனை. ஸ்டைலான நியூசி தொடக்க ஆட்டக்காரர் டி20 சர்வதேச போட்டிகளில் 143 போட்டிகளில் 109.70 ஸ்ட்ரைக் ரேட்டில் ஒரு சதம் மற்றும் 25 அரை சதங்களுடன் 3,820 ரன்களை எடுத்துள்ளார். 2006 இல், இருந்து விளையாடி வரும் மூத்த வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு முக்கிய வீரராக திகழ்கிறார். WPL ஏலத்தில், பேட்ஸ் தனது அடிப்படை விலையான INR 30 லட்சத்துடன் தனது பெயரையும் சமர்ப்பித்தார். அவரது மகத்தான அனுபவம் மற்றும் T20I களில் அற்புதமான பேட்டிங் எண்களைக் கருத்தில் கொண்டு, அதிக தொகையுடன் ஒப்பந்தம் செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை வயதின் காரணமாக யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஆனால், நடந்து முடிந்த மகளிர் டி20 உலகக் கோப்பையில், அவர் தனது பேட் மூலம் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தி, போட்டியில் ரன் குவித்த முன்னணி வீராங்கனைகளின் பட்டியலில் இடம்பிடித்தார். நான்கு போட்டிகளில் 121.23 ஸ்ட்ரைக் ரேட்டில் 137 ரன்களை குவித்த அவர், போட்டியில் தனது அணிக்காக அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார்.

WPL 2023: ஏலம் போகாத வீராங்கனைகள்… உலகக்கோப்பையில் கலக்கிய தருணங்கள்...மிஸ் செய்யப்பட்ட டாப்-5 யார்? யார்?

  1. லாரா வால்வார்ட்

2023 மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்காவை அழைத்து சென்ற பயணத்தில், லாரா வால்வார்ட் முக்கிய பங்கு வகிக்கிறார். தொடரில், அவர் இதுவரை ஐந்து ஆட்டங்களில் 100.69 ஸ்ட்ரைக் ரேட்டில் 169 ரன்கள் குவித்துள்ளார். இந்த விறுவிறுப்பான எண்களுடன், மெகா நிகழ்வில் நான்காவது முன்னணி ரன் எடுத்தவர் ஆவார். வோல்வார்ட் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அரைசதம் அடித்ததோடு அணியின் வெற்றிக்கும் வழி வகுத்தார். ஏலத்தில் தனது அடிப்படை விலையான INR 30 லட்சத்துடன் பங்கேற்று விற்பனையாகாமல் போனார். இதுவரை, இவர் தென்னாப்பிரிக்காவுக்காக 52 WT20I போட்டிகளில் தோன்றி ஆறு அரை சதங்களுடன் 1,018 ரன்கள் குவித்துள்ளார். சமீபத்தில், அவர் தனது WBBL அணியான அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கும் முதல் முறையாக கோப்பையை வெல்வதற்கு பங்களித்தார். போட்டியில், அவர் தனது அணிக்காக 106.05 ஸ்ட்ரைக் ரேட்டில் அரை சதத்துடன் 16 போட்டிகளில் 403 ரன்கள் எடுத்ததன் மூலம் அதிக ரன்கள் எடுத்தவர் ஆனார்.

WPL 2023: ஏலம் போகாத வீராங்கனைகள்… உலகக்கோப்பையில் கலக்கிய தருணங்கள்...மிஸ் செய்யப்பட்ட டாப்-5 யார்? யார்?

      1. டாஸ்மின் பிரிட்ஸ்

WPL ஏலத்தில் உரிமையாளர்களால் புறக்கணிக்கப்பட்ட டாஸ்மின் பிரிட்ஸ் 2023 மகளிர் டி20 உலகக் கோப்பையில் தனது பேட் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரம்மாண்டமான டி20 போட்டியில், 108.64 ஸ்ட்ரைக் ரேட்டில் ஐந்து போட்டிகளில் இரண்டு அரைசதங்களுடன் 176 ரன்கள் எடுத்தார். தற்போது, இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர்-ப்ரன்ட்டுக்குப் பிறகு போட்டியில் அதிக ரன் எடுத்த இரண்டாவது வீரராகவும் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான அவரது அணியின் அரையிறுதி வெற்றியில், அவர் 68 ரன்கள் (55 பந்துகள்) எடுத்து போட்டியை வெல்ல வைத்தார். அவரது தொடக்க பேட்டிங் திறமைக்கு கவனம் செலுத்தி, ஏலத்தில் அவரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்திருப்பார். ஆனால், யாருமே எடுக்க முன்வரவில்லை என்பது பெரும் ஏமாற்றமாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget