மேலும் அறிய

Women's T20 World Cup 2023: அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறதா இந்தியா? புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?

மகளிர் டி20 உலகக் கோப்பை: வரும் பிப்ரவரி 23ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படிஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 

இதையடுத்து, வரும் பிப்ரவரி 23ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் முடிவாகவில்லை என்றாலும், இன்று நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி தீர்மானிக்கும். 

குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள அணி, குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியா அணியுடன் அரையிறுதி போட்டியில் மோதும். மகளிர் கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியா அணி எப்போதும் பலம் வாய்ந்த அணியாகவே வலம் வருகிறது. நடப்பு தொடரிலும் ஆஸ்திரேலியா அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. குரூப் ஏ பிரிவில் இருந்து ஏற்கனவே இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் வெளியேறினர். இதையடுத்து, நியூசிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா அணிகளில் ஏதேனும் ஒரு அணி குரூப் ஏ பிரிவில் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. 

குரூப் பி பிரிவில் யார் அரையிறுதிக்கு செல்வார்கள்? 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும். மறுபுறம், தென்னாப்பிரிக்கா அணி வென்றால், நான்கு புள்ளிகளை பெற்று நியூசிலாந்தை விட சிறந்த நிகர ரன் ரேட்டுடன் அரையிறுதிக்கு தகுதிபெறும். 

குரூப் பி நிலைமை என்ன? 

குரூப் பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் இந்தியா தலா 6 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளது. இதில், இந்தியா லீக் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் உள்ளது. இங்கிலாந்து அணி 3 போட்டிகள் விளையாடி 3 வெற்றியுடன் அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதிபெற்றது. இங்கிலாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. குரூப்-பியில் இருந்து பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகள் ஏற்கனவே போட்டியிலிருந்து வெளியேறிவிட்டன.  இங்கிலாந்து மூன்று போட்டிகளில் +1.776 நிகர ரன்ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவின் நிகர ரன்ரேட் +0.253 ஆகும். பாக்கிஸ்தான் அணி இங்கிலாந்தை அதிக வித்தியாசத்தில் வீழ்த்தினால், அது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படலாம். இருப்பினும் இங்கிலாந்தின் தற்போதைய ஃபார்மைப் பார்க்கும்போது பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கமாட்டார்கள் என்று தெரிகிறது. இங்கிலாந்து அணி அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தினால்  இந்தியா முதலிடத்தை எட்டும், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட வேண்டிய அவசியமில்லை. மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இது தவிர, காமன்வெல்த் போட்டியின் இறுதிப் போட்டியிலும் தோல்வியடைந்து. இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால் இந்திய அணி முதல் இடத்தை அடையும். இதன் காரணமாக, இந்திய அணி அரையிறுதியில் குரூப் ஏ பிரிவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அல்லது தென்னாப்பிரிக்காவை வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி எதிர்கொள்ளும். 

அரையிறுதியில் சாத்தியமான போட்டி

தேதி அணிகள் இடம்
பிப்ரவரி 23 ஆஸ்திரேலியா vs இந்தியா சிட்டி எண்ட்
பிப்ரவரி 24 இங்கிலாந்து vs நியூசிலாந்து/தென்னாப்பிரிக்கா சிட்டி எண்ட்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget