மேலும் அறிய

Women's T20 World Cup 2023: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டி.. போட்டி நடைபெறும் பிட்ச் எப்படி? ஒரு பார்வை

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இன்றைய இறுதிப்போட்டிக்கு முன்னதாக, போட்டி நடைபெறும் நியூலேண்ட்ஸ் மைதானத்தை பற்றிய புள்ளிவிவரங்களை இங்கே பார்க்கலாம். 

மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியை இன்று கேப் டவுன் நகரிலுள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா அணி தனது சொந்த மைதானத்தில் தங்களது முதல் சாம்பியன்ஷிப்பை வெல்லும் நோக்கில் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில், பலமிக்க ஆஸ்திரேலியா அணி நடப்பு சாம்பியன் பெற்ற பெருமையை தக்கவைக்க விரும்பும். 

2023 மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மகளிர் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், ஒரு போட்டிகளில் கூட தோற்கவில்லை. குரூப் ஏ பிரிவில் நடந்த நான்கு போட்டிகளையும் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலிய அணி, அரையிறுதியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

மறுபுறம், தென்னாப்பிரிக்கா தாங்கள் விளையாடிய லீக் போட்டிகளில் நான்கில் இரண்டு போட்டிகளில் வென்று ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதிபெற்றது. அரையிறுதியில் சுனே லூஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து இன்று முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் களமிறங்கியுள்ளது. 

இந்தநிலையில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இன்றைய இறுதிப்போட்டிக்கு முன்னதாக, போட்டி நடைபெறும் நியூலேண்ட்ஸ் மைதானத்தை பற்றிய புள்ளிவிவரங்களை இங்கே பார்க்கலாம். 

  • மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் மற்றும் அரையிறுதிகள் என இந்த மைதானத்தில் மொத்தம் 11 போட்டிகள் நடைபெற்றுள்ளது.
  • முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்ற போட்டிகள்: 6
  • இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகள் வென்ற போட்டிகள்: 5
  • போட்டிகள் டை: 0
  • கைவிடப்பட்ட போட்டிகள்: 0
  • அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் : 102 - முனீபா அலி (பாகிஸ்தான்) vs அயர்லாந்து
  • சிறந்த பந்துவீச்சு: 4/18 - நஷ்ரா சந்து (பாகிஸ்தான்) vs அயர்லாந்து
  • அணியின் அதிகபட்ச ஸ்கோர்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
  • அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்:  பாகிஸ்தான் அணிக்கு எதிராக அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 95 ரன்களில் சுருண்டது.
  • வெற்றிகரமான ஹையட்ஸ் ரன் - சேஸ் : பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை துரத்தி வெற்றி பெற்றது. 

நியூலேண்ட்ஸ் பிட்ச் அறிக்கை:

கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் பிட்ச் எப்போதும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாகவே உள்ளது. இங்கு நடந்த இரண்டு அரையிறுதி போட்டிகளிலும் நான்கு அணிகளும் அதிக ரன்கள் குவித்து அசத்தினர். இதையடுத்து, இன்று நடைபெறும் போட்டியும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

யாருக்கு வெற்றி? 

ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையில் அலிசா ஹீலி , பெத் மூனி , மெக் லானிங் , கார்ண்டர் மற்றும் எலிஸ் பெர்ரி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஷப்னிம் இஸ்மாயில் , அயபோங்கா காக்கா , மரிசான் கப் மற்றும் நோன்குலுலேகோ மலாபா ஆகியோர் தென்னாப்ரிக்க அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர்.  இந்த தொடரில் இதுவரை முதல் 10 ரன்கள் எடுத்தவர்களில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மூன்று பேரும் , தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இரண்டு பேரும் இடம்பெற்றுள்ளனர். தலா இரண்டு பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் எடுத்த முதல் 10 பேரின் பட்டியலில் உள்ளனர் . இதனால் இரு அணிகளும் சமபலத்தில் உள்ளன.

தென்னாப்ரிக்க உத்தேச அணி:

டாஸ்மின் பிரிட்ஸ், லாரா வோல்வார்ட், மரிசான் கேப்,  சுனே லூஸ் (கேப்டன்), சோலி ட்ரையோன்,  அன்னேக் போஷ், நாடின் டி க்ளெர்க்,  சினாலோ ஜாஃப்டா , ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ ம்லபா

ஆஸ்திரேலியா உத்தேச அணி:

அலிசா ஹீலி, பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னர், எலிஸ் பெர்ரி,  தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ்,  ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனாசென், மேக்ன் ஷட், டார்சி பிரவுன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
Embed widget