IND W vs PAK W: மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை பதம் பார்த்த ரானா - பூஜா ஜோடி.. 244 ரன்கள் இலக்கு வைத்த இந்தியா
உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 244 ரன்கள் குவித்துள்ளது.
மகளிருக்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் சர்வதேச தரவரிசை அடிப்படையில் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி இன்று தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷெஃபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதைத் தொடர்ந்து நிதானமாக ஆடிய ஸ்மிருதி மந்தானா மற்றும் தீப்தி சர்மா இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Innings Break!
— BCCI Women (@BCCIWomen) March 6, 2022
A stupendous 122-run stand between @Vastrakarp25 (67) & @SnehRana15 (53*) propels #TeamIndia to a total of 244/7 on the board.
Scorecard - https://t.co/ilSub2ptIC #INDvPAK #CWC22 pic.twitter.com/xPlrNO2HZP
சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தானா அரைசதம் கடந்து 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் மித்தாலி ராஜ் 9 ரன்களுடனும், துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் 5 ரன்களுடன் வெளியேறினார். இதனால் இந்திய அணி 114 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த பூஜா வட்சராக்கர் மற்றும் ஸ்நேஹ் ரானா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அதிரடியாக விளையாட தொடங்கினர். இதன்காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இருவரும் அரைசதம் கடந்தனர். பூஜா வட்சராக்கர் 67 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ஸ்நேஹ் ரானா 53 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் 7ஆவது விக்கெட்டிற்கு இந்த இருவரும் வேகமாக ரன்களை சேர்த்தனர். குறிப்பாக 35 முதல் 45ஆவது ஓவர் வரை 84 ரன்கள் எடுத்து இருவரும் அசத்தினர். அத்துடன் 7ஆவது விக்கெட்டிற்கு ரானா-பூஜா ஜோடி 122 ரன்கள் சேர்த்து உலக சாதனை படைத்துள்ளது.
WORLD RECORD!!🇮🇳
— Female Cricket #CWC22 (@imfemalecricket) March 6, 2022
That's the Highest 7th Wicket Partnership in Women's ODI Cricket ❤️
Take a bow Sneh Rana and Pooja Vastakar! 🇮🇳#CWC22 #INDvPAK pic.twitter.com/TolysUsqyl
இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு 245 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி 2 முறை பாகிஸ்தானை எதிர்கொண்டுள்ளது. அந்த இரண்டு முறையும் இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியை வென்றுள்ளது. ஆகவே இன்றைய போட்டியிலும் அதேபோன்று பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்