ICC - Srilanka : அரசியல் தலையீட்டால் தடைபோட்ட ஐசிசி.. 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுமா இலங்கை அணி..?
அரசியல் தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட்டின் உறுப்பினர் பதவியை ஐசிசி நேற்று தடை செய்தது.
உலகக் கோப்பை 2023ல் இலங்கை கிரிக்கெட் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லீக் சுற்றில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள இலங்கை அணி 2ல் மட்டுமே வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. இதன்மூலம், குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
அரசியல் தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட்டின் உறுப்பினர் பதவியை ஐசிசி நேற்று தடை செய்தது. இவ்வாறான நிலையில் ஐ.சி.சி விதித்துள்ள இந்தத் தடை இலங்கை கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும்.
2 வெற்றிகள் மற்றும் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பை லீக் போட்டிகள் முடிந்துவிட்டது, ஆனால் இந்த உலகக் கோப்பையில் அந்த அணிக்கு ஏதேனும் போட்டி எஞ்சியிருந்தால், அந்த அணி இந்த தடை காரணமாக விளையாட முடியாமல் போயிருக்கும். ஒருவேளை, இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதிபெற்று ஐ.சி.சி இலங்கை அணியை இடைநீக்கம் செய்திருந்தால், இலங்கை அணி அரையிறுதி போட்டியில் கூட விளையாட முடியாது. இருப்பினும், இந்த உலகக் கோப்பையில் இலங்கை அணி தனது அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது.
2024 டி20 உலகக் கோப்பையில் என்ன நடக்கும்?
தற்போதைய ஒருநாள் உலகக் கோப்பை 2023ல் இலங்கை அணியின் பயணமானது முடிவுக்கு வந்தது. ஆனால் ஒரு வருடத்திற்குள் இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 திரும்ப வேண்டும். இவ்வாறான நிலையில், அடுத்த உலகக் கோப்பை வரை இலங்கை கிரிக்கெட்டின் அங்கீகாரத்தை ஐசிசி இணைத்துக் கொள்ளாவிட்டால், அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி விளையாட முடியாது. இது நடந்தால், இலங்கை கிரிக்கெட்டுக்கு இது மிகவும் மோசமான, வெட்கக்கேடான வரலாறாக மாறும். ஏனென்றால் குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன, சனத் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் என பல சிறந்த வீரர்களை உலக கிரிக்கெட்டுக்கு கொடுத்த இலங்கை அணிக்கு இது மிகவும் வெட்ககேடானது. இலங்கை அணி கடந்த 1996ம் நடந்த உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை தூக்கியது. மேலும், ஒருநாள் உலகக் கோப்பை 2007 மற்றும் 2011 ல் இறுதிப் போட்டி வரை சென்றது. இது தவிர 2014 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி கோப்பையை வென்றது. எனவே, இது ஒரு சாம்பியன் அணியாக இருந்து வருகிறது. தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது, அவர்களின் அணி வரும் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாது என்று தெரிகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் இடைநீக்கத்தை எதிர்கொள்ளும் ஐசிசியின் இரண்டாவது முழு உறுப்பினர் இலங்கை கிரிக்கெட் ஆகும். இதே காரணத்திற்காக ஜிம்பாப்வே இதற்கு முன்பு 2019 இல் இடைநீக்கம் செய்யப்பட்டது. இலங்கை அணி இடைநீக்கம் செய்யப்பட்டாலும், அவர்களது மண்ணில் எந்தவொரு தொடர் அல்லது போட்டிகள் நடைபெறாது. நல்லவேளையாக டிசம்பர் வரை எந்த கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஐசிசி ஆண்கள் U19 கிரிக்கெட் உலகக் கோப்பையை இலங்கை நடத்துகிறது. அதற்குள், இலங்கை அணி தங்களது இடைநீக்கத்தை நீக்கினால், ஐசிசி ஆண்கள் U19 கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெறும். அப்படி இல்லையேல் வேறு நாட்டிற்கு இந்த போட்டி மாற்றப்படும்.