WC Qualifiers 2023: போட்டி முடிந்தவுடன் நடந்த நெகிழ்ச்சி.. குப்பைகளை கொத்தாக அள்ளிய ஜிம்பாப்வே ரசிகர்கள்..!
போட்டி முடிந்தவுடன் ஜிம்பாப்வே ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2023 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நேற்று முதல் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகின்றன. ஒருநாள் உலகக் கோப்பையில் கடைசி இரண்டு அணிகளான 9வது மற்றும் 10 அணிகளில் இணைய, 10 அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் ஆட்டானது போட்டியை நடத்துன் ஜிம்பாப்வே மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டிக்கு பிறகு ஜிம்பாப்வே ரசிகர்கள் ஸ்டேடியத்தை சுத்தம் செய்து அனைவரின் மனதையும் வென்றனர்.
Happening Now !!! @cricketworldcup Trophy 🏆 Carnival at Joina City to Kickstart the World Cup Qualifiers being hosted by Zimbabwe 🇿🇼!
— Don Conrado Sol 🇿🇼👉🇿🇦👴 (@haploz99) June 10, 2023
Zimbabwe play their first game vs Nepal 🇳🇵 on 18 June at Harare Sports Club !! @ZTNPrime pic.twitter.com/kd7epJvbK7
ஜிம்பாப்வே மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியானது ஹராரேயில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது. போட்டி முடிந்தவுடன் ஜிம்பாப்வே ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Nice gesture by Zimbabwe fans to clean the ground after the match got over against Nepal in World Cup Qualifiers. pic.twitter.com/2frn8V4WvY
— Johns. (@CricCrazyJohns) June 19, 2023
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நெட்டிசன்கள், “ஜிம்பாப்வே மற்றும் நேபாள அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்ததும், ஜிம்பாப்வே ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த குப்பைகளை எல்லாம் சுத்தம் செய்தார். ரசிகர்கள் கையில் குப்பைப் பையை பிடித்தபடி, அதில் குப்பைகளை சேகரிக்கும் காட்சியை காணொளியில் காணலாம். இந்த வீடியோவில் ஜிம்பாப்வே ரசிகர்களை மக்கள் வெகுவாக பாராட்டினர்.
போட்டி சுருக்கம்:
ஐசிசி உலகக் கோப்பை தகுதிச் சுற்று 2023ன் முதல் ஆட்டம் ஜிம்பாப்வே மற்றும் நேபாளம் இடையே நடைபெற்றது. இதில், ஜிம்பாப்வே 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நேபாள அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 290 ரன்கள் எடுத்தது.
290 ரன்களை விரட்டிய ஜிம்பாப்வே அணி 44. 1 ஓவர்களில் வெற்று இலக்கை எட்டியது. அந்த அணியில் கேப்டன் கிரேக் எர்வின் 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 121* ரன்களும், சீன் வில்லியம்ஸ் 13 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 102* ரன்களும் எடுத்தனர்.