Team India: முன்னாள் சாம்பியன்’ஸுகளை நடுங்க வைத்த இந்தியா.. அரையிறுதிக்குள் நுழைந்தது எப்படி..? திரும்பி பார்ப்போம் வாங்க!
WC 2023 Semi-Final: இந்திய அணி அரையிறுதிக்கு வந்த கதையை முழுவதுமாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
உலகக் கோப்பை 2023ல் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி பெற்ற அனைத்து வெற்றிகளும் சிறப்பானதாக இருந்தது.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் இந்த அற்புதமான ஆட்டத்தை கண்டு ரசிகர்கள் முதல் நிபுணர்கள் வரை அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். ஏனென்றால் இதற்கு முன் எந்த ஐசிசி போட்டியிலும் இந்திய அணி இந்த பாணியில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவு செய்ததில்லை. இம்முறை அணியிடம் எதிர்பார்ப்புகள் இருந்தன ஆனால் இவ்வளவு வலுவான ஆட்டத்தை கொடுக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இப்படியிருக்க இந்திய அணி அரையிறுதிக்கு வந்த கதையை முழுவதுமாக படித்தாலே இதற்கான காரணம் புரியும்...
முதல் போட்டி: விராட் மற்றும் கே.எல் ராகுலில் நிதான ஆட்டம்
2023 உலகக் கோப்பையின் முதல் போட்டியில், இந்தியா ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை தனது சுழல் வலையில் சிக்க வைத்தது. இதன் விளைவாக ஆஸ்திரேலியா 200 ரன்களைக் கூட தொட முடியாமல் சுருண்டது. பதிலுக்கு பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 200 ரன்கள் என்ற இந்த சிறிய இலக்கை துரத்திய போது, இரண்டு ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் வீசிய பந்துகளை பார்த்தால் இந்திய அணியால் 50 ரன்களைக் கூட தொட முடியாது என்று தோன்றியது. இங்கிருந்து விராட் கோலி (85), கே.எல்.ராகுல் (97) சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி இந்திய அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டனர். இறுதியில் இந்திய அணி 41.2 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி: ரோஹித்தின் அதிரடி இன்னிங்ஸ்
இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சவாலை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 272 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா பவர் பிளேயிலேயே பட்டையை கிளப்பினார். ரோஹித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். இஷான், விராட், ஷ்ரேயாஸ் ஆகியோரும் பேட்டிங்கில் ஒத்துழைப்பு அளிக்க, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியை வெறும் 35 ஓவர்களில் இந்தியா முடித்தது பெரிய விஷயம்.
மூன்றாவது போட்டி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி
இந்திய அணி மூன்றாவது போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியது. இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இன்னிங்சிலேயே வெற்றியை இந்திய பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியை பங்கம் செய்தனர். பும்ரா முதல் சிராஜ், ஹர்திக், குல்தீப், ஜடேஜா என அனைத்து பந்துவீச்சாளர்களும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த, பாகிஸ்தான் அணி வெறும் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பதிலுக்கு பேட்டிங் இந்திய அணி 30.3 ஓவர்களில் இலகுவாக வெற்றி இலக்கை எட்டியது. இங்கே கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் 86 ரன்கள் எடுத்து ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாடினார்.
நான்காவது போட்டி: வங்கதேச அணியை வதம் செய்த இந்திய அணி
ஆசிய கோப்பை 2023ல் வங்கதேச அணி இந்தியாவிடம் த்ரில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு இந்திய அணி ஒரு மாதத்திற்கு பிறகு தக்க பதிலடி கொடுத்தது. முதலில் வங்கதேசத்தை 256 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்திய அணி, அதன் பிறகு விராட் கோலியின் (103) சதத்தால் எளிதாக இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் இந்தியா 51 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐந்தாவது போட்டி: நியூசிலாந்து அணிக்கு எதிராக சிறப்பான வெற்றி
இந்த உலகக் கோப்பையில் முதல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியும், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. முகமது ஷமியின் 5 விக்கெட்டுக்கள் எடுத்ததன் மூலம் நியூசிலாந்து அணி 273 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு விராட் (95), ரோஹித் (46) இன்னிங்ஸ் வெற்றியை எளிதாக்கியது. 2 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆறாவது போட்டி: நடப்பு சாம்பியனை நடுங்க வைத்த இந்தியா
லக்னோவின் பந்துவீச்சில் இந்தியாவை வெறும் 229 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி கட்டுப்படுத்தியபோது, இந்தியாவின் வெற்றித் தேர் இப்போது நிறுத்தப்படலாம் என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் நடப்பு சாம்பியனை நடுங்க வைத்தனர். இங்கிலாந்தின் ஒட்டுமொத்த அணியும் வெறும் 129 ஆகக் குறைக்கப்பட்டது. இதில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏழாவது போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது
வான்கடே மைதானத்தில் இலங்கைக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா 357 ரன்கள் குவித்தது. பதிலுக்கு பேட்டிங் ஆட வந்த இலங்கை அணி 55 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இங்கு ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.