Watch Video : என்னா டைவிங்...! பாயும் புலியாக மாறிய சாம்சன்..! இந்தியாவை வெற்றிபெற வைத்த தருணம் அது..!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சாம்சன் அபாரமாக கீப்பிங் செய்து வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக மாறினார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று டிரினிடாட் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 309 ரன்களை இலக்காக நிர்ணயித்தாலும், இந்திய அணி போராடி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர் என்பதை காட்டிலும், கடைசி ஓவரை வீசிய முகமது சிராஜ்தான் மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டபோது, முகமது சிராஜ் வீசிய முதல் 4 பந்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 7 ரன்களை எடுத்துவிட்டனர்.

கடைசி இரண்டு பந்தில் 8 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டபோது, முகமது சிராஜ் பேட்ஸ்மேன் ஷெப்பர்ட் காலை குறி வைத்து பந்துவீச முயற்சித்தார். ஆனால், அவர் வீசிய பந்து மிகப்பெரிய வைடாக பின்பக்கம் சென்றது. ஆனாலும், விக்கெட் கீப்பர் சாம்சன் மின்னல் வேகத்தில் பாய்ந்து அந்த வைடை தடுத்தார். சாம்சன் மட்டும் அந்த வைடை தடுக்காவிட்டால் நிச்சயம் பவுண்டரிக்கு அந்த பந்து சென்றிருக்கும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரே பந்தில் 5 ரன்கள் கிடைத்திருக்கும்.
@IamSanjuSamson मेन ऑफ दा मैच....💞
— मोहित शुक्ला گاندھیائی (@shuklaa1986) July 22, 2022
सालो बाद दूरदर्शन पर भारत के दर्शन हुए... @ddsportschannel LOVE YOU...🇮🇳💕#DDSports pic.twitter.com/dMdj76hw9L
Sanju Samson’s stop was the difference in the end. 100% boundary. And that would’ve been Game Windies.
— Aakash Chopra (@cricketaakash) July 22, 2022
இந்தியாவின் வெற்றி வாய்ப்பையும் வெஸ்ட் இண்டீஸ் அணி தட்டிப்பறித்திருக்கம் அபாயம் ஏற்பட்டிருக்கும். ஆனாலும், சாம்சனின் அபார கீப்பிங்கால் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. சாம்சனின் அபார பீல்டிங்கை பாராட்டி இந்திய ரசிகர்கள் அவரை டுவிட்டரில் வார்த்தைகளால் பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




















