Watch Video: அம்பயராக அவதாரம் எடுத்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்... யார் தெரியுமா?
கிரிக்கெட், ரக்பி விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடும் டி20 கிரிக்கெட் தொடர்தான் இந்த டி20 ப்ளாக் க்ளாஷ். இந்த கிரிக்கெட் தொடருக்கு, அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று உலகின் வெவ்வேறு நாடுகளில் 20 ஓவர் கிரிக்கெட் லீக் தொடர்கள் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என வெவ்வேறு நாடுகளில் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில், நியூசிலாந்தில் நடத்தப்படும் வித்தியாசமான கிரிக்கெட் தொடர்தான் டி20 ப்ளாக் க்ளாஷ்.
கிரிக்கெட், ரக்பி என இரு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடும் டி20 கிரிக்கெட் தொடர்தான் இந்த ப்ளாக் க்ளாஷ். நியூசிலாந்தில் நடத்தப்படும் இந்த கிரிக்கெட் தொடருக்கு, அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது.
2022-ம் ஆண்டுக்கான டி20 ப்ளாக் க்ளாஷ் தொடர் இப்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியின்போது, நியூசிலாந்தின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷம் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், விளையாட்டு வீரராக அல்ல, நடுவராக. நேற்று நடைபெற்ற போட்டியயில், இரண்டு நடுவர்களில் ஒருவராக ஜிம்மி களமிறங்கி இருந்தார். அவர் நடுவராக செயல்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவைக் காண:
— Subuhi S (@sportsgeek090) January 24, 2022
ஒரு கிரிக்கெட் போட்டியின் நடுவராக ஜிம்மி நீஷம் களமிறங்குவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே, கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து டி20 ப்ளாக் க்ளாஷ் தொடரில், இதே போன்று ஒரு போட்டியில் நீஷம் நடுவராக செயல்பட்டிருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டீவான ஜிம்மி நீஷம், அவ்வப்போது வம்பான கருத்துகளை சொல்லி நெட்டிசன்களிடம் அடி வாங்குவது, சில நேரங்களில் பாராட்டு வாங்குவதும் வழக்கம். இந்நிலையில், நீஷமின் புதிய அவதாரத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் ஓய்வுக்கு பின்பு நீஷமிற்கு ஒரு வேலை தயாராக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Watch Video: ’இப்படி ஒரு ரன் அவுட்டா?’ - பங்களாதேஷ் ப்ரீமியர் லீகில் நடந்த சுவாரஸ்யம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்