Virat Kohli: கோல்டன் பூட்: கேன்சரில் இருந்து நீங்கள் மீண்டு வந்ததால் இது நடந்தது.. யுவராஜ் சிங் பவரை காட்டிய கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் விராட் கோலிக்கு ஒரு பரிசு ஒன்றை டேடிக்கேட் செய்திருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நேற்று விராட் கோலிக்கு ஒரு தங்க ஷூவை பரிசாக அளித்தார். அத்துடன் அந்தப் பதிவில் விராட் கோலி தொடர்பாக அவர் உருக்கமாக சிலவற்றை பதிவு செய்திருந்தார். அந்தப் பதவி பலருடைய கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் யுவராஜ் சிங்கின் அந்தப் பதிவிற்கு விராட் கோலி ஒரு பதில் பதிவை செய்துள்ளார். அதில், “உங்களுடைய இந்த சிறப்பான அன்பழிப்பிற்கு எனது மனமார்ந்த நன்றி. புற்றுநோயிலிருந்து நீங்கள் மீண்டு வந்தது அனைவருக்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது. இது கிரிக்கெட் உலகில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கும் பெறும் ஊக்கமாக அமைந்திருக்கும். நீங்கள் எப்போதும் உங்களை சுற்றியுள்ள நபர்களுக்கு அன்பை தந்துள்ளீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் அதிகமான மகிழ்ச்சி வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
முன்னதாக நேற்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “டெல்லியில் இருந்து வந்த சிறுவனுக்கு இந்த சிறப்பான ஷூவை நான் பரிசாக அளிக்கிறேன். இந்திய அணியின் கேப்டனாக நீங்கள் ஆற்றிய பணி மிகவும் சிறப்பானது. உங்களுடைய கேப்டன் பணி மூலம் ரசிகர்கள் பலருடைய முகத்தில் ஆனந்த சிரிப்பு ஏற்பட்டது. நீங்கள் எப்போதும் இருப்பது போலவே இருந்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி 23,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அத்துடன் ஒருநாள்,டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய அனைத்திலும் 50 க்கும் அதிகமான சராசரியை வைத்துள்ளார்.
மேலும் படிக்க: நடால், ரொனால்டோ, பிரபாஸ், மெஸ்ஸி வரிசையில் விராட் கோலிக்கு ட்விட்டரில் கிடைத்த புதிய கௌரவம் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்