Kohli Press Conference: முரண்படும் கங்குலி, கோலியின் கருத்துகள்.. என்னதான் நடக்குது இந்திய கிரிக்கெட் அணியில்?
கோலி, கங்குலியின் கருத்துகள் மாறுபட்டிருப்பதால், கிரிக்கெட் வட்டாரமும், ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சமூக வலைதளத்தில் இந்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளுக்கு நான் தயாராக இருக்கிறேன் எனவும் பிசிசிஐயிடம் தான் ஓய்வு கேட்கவில்லை எனவும் செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் டி20 தொடரிலும் விளையாட உள்ளது. டி20 தொடர் விளையாடுவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் தென்னாப்ரிகாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்திருக்கும் நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியானது. பிசிசிஐ இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளானது.
இப்போது இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். மேலும், டி20 கேப்டன்சியில் இருந்து கோலி விலகியது பற்றி அவர் மனம் திறந்திருக்கிறார். அதில் “நான் என்னுடைய முடிவை அறிவித்தபோது பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. என்னுடைய முடிவை மாற்றச்சொல்லி பிசிசிஐ தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இந்த முடிவு சரியானதுதான் என பிசிசிஐ தெரிவித்தது” என போட்டு உடைத்திருக்கிறார்.
My communication with BCCI hasn't happened & I wanted to rest. I was contacted 1.5 hours before the meeting. There was no communication. Chief selector discussed the Test team. The 5 selectors told me I will not be ODI captain. Which is fine: Virat Kohli replies to ANI ques pic.twitter.com/bDdgFKAfh6
— ANI (@ANI) December 15, 2021
ஆனால், கோலி சொல்லியதற்கு முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருப்பது. கோலி டி20 கேப்டன்சியில் இருந்து விலகியது பற்றி அவர் பேசும்போது, “டி20 கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம் என நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், அவர் கேப்டன் பதவியில் தொடர விரும்பவில்லை” என தெரிவித்திருக்கிறார்.
கோலி, கங்குலியின் கருத்துகள் வேறுபட்டிருப்பதால், கிரிக்கெட் வட்டாரமும், ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். எந்த பக்கம் உண்மை என்பது தெரியவில்லை, ஆனால், கோலி ரசிகர்கள் ஏற்கனவே கங்குலியை சாட ஆரம்பித்துவிட்டனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்