மேலும் அறிய

Virat Kohli PC Today:கேப்டவுன் டெஸ்டிற்கு முன்பாக இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் விராட் கோலி !

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நாளை தொடங்குகிறது

இந்நிலையில் எப்போதும் போட்டிக்கு முன்பாக இந்திய கேப்டன் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் முன்பாக இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் இம்முறை இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இன்று மாலை 3.30 மணிக்கு விராட் கோலி காணொலி மூலம் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலி அடுத்த டெஸ்டில் நிச்சயம் விளையாடுவார் என்று உறுதியளித்திருந்தார். 

 

இந்தச் சூழலில் தற்போது விராட் கோலி விளையாடுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. விராட் கோலி கடந்த போட்டியில் களமிறங்காததால் நாளை தன்னுடைய 99 டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். அவருடைய 100ஆவது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும். 

 

கேப்டவுன் மைதானத்தில் இந்தியா:

கேப்டவுன் மைதானத்தில் இதுவரை இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 282 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியையும் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியை தோனி தலைமையிலான இந்திய அணி டிரா செய்தது.


Virat Kohli PC Today:கேப்டவுன் டெஸ்டிற்கு முன்பாக இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் விராட் கோலி !

கடைசியாக 2018ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் கேப்டவுன் டெஸ்டில் தோல்வி அடைந்தது. ஆகவே மொத்தமாக கேப்டவுனில் விளையாடியுள்ள 5 போட்டிகளில்  இந்திய அணி 3ல் தோல்வி அடைந்துள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கேப்டவுன் மைதானத்தில் இந்திய டெஸ்ட் போட்டியை இதுவரை வென்றதே இல்லை. 

மேலும் படிக்க: மாஸ்டர் ஸ்டோர்க் ஐடியா... - ட்விட்டரில் பதிவிட்ட கேகேஆர்... வெளுத்து வாங்கிய ஜடேஜா !

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rishi Sunak:
Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் 
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் -  வீடியோ
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் - வீடியோ
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rishi Sunak:
Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் 
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் -  வீடியோ
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் - வீடியோ
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Embed widget