Watch video: ஆசிய கோப்பை 2022 : போட்டிக்கு முன் அணைத்து அன்பைச்சொன்ன வாசிம் அக்ரம் - விராட் கோலியின் வீடியோ...
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி துவங்குவதற்கு முன்பு வாசிம் அக்ரம் மற்றும் கோலி சந்தித்து கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை டி 20 போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமும் மற்றும் விராட் கோலியும் சந்தித்துக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#INDvsPAK #wasimakram#ViratKohli @imVkohli @wasimakramlive pic.twitter.com/EcxAF1ML7n
— SiabRehmanKhanPti (@SiabRehmanKhan4) August 28, 2022
ஓய்வுக்கு பின் கோலி
விராட் கோலி, ஆசிய கோப்பை 2022 தொடரில் 41 நாட்கள் ஓய்வுக்கு பிறகு திரும்புகிறார். பலரும் இந்திய அணிக்குள் விராட் கோலி வருகை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆசிய கோப்பைரோஹித் சர்மா தலைமையிலான அணி (இன்று )ஆகஸ்ட் 28 ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியின் சிறப்பு என்னவென்றால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி தனது 100 வது டி20 போட்டியில் விளையாட இருக்கிறார். கடந்த 2010 ம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக டி20 தொடரில் அறிமுகமான கோலி, தனது 100 வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்குவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசிம் அக்ராம்- விராட் கோலி சந்திப்பு:
இந்நிலையில் இன்று, இந்தியா - பாகிஸ்தான் முன்பாக, மைதானத்தில் இருந்த இந்திய அணி வீரர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ராமை சந்தித்தார். அப்போது இருவரும் கட்டுப்பிடித்து ஆரத்தழுவி கொண்டனர். இந்த வீடியோ இரு நாட்டு வீரர்களும் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
View this post on Instagram