Watch Video : சின்ன சின்ன அன்பில்தானே.. காத்திருந்த மாற்றுத்திறனாளி.. ஜெர்ஸியை கிஃப்ட் கொடுத்த கோலி! நெகிழ்ச்சி வீடியோ!
தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் வெற்றியை ருசித்த விராட் தன்னுடைய ஒரு செயல் மூலம் ரசிகர்களின் மனங்களையும் வென்றுள்ளார்.
மொகாலியில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியினர் போட்டியின் மூன்றாவது நாளான நேற்றே வெற்றிக்கனியை பறித்தனர். இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய டெஸ்ட் போட்டி விராட் கோலிக்கு முக்கியமான போட்டியாகும். ஏனென்றால் விராட் கோலிக்கு இந்த டெஸ்ட் போட்டி 100வது டெஸ்ட் போட்டி.
— Subash (@SubbuSubash_17) March 7, 2022
தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் வெற்றியை ருசித்த விராட் தன்னுடைய ஒரு செயல் மூலம் ரசிகர்களின் மனங்களையும் வென்றுள்ளார். மேட்ச் முடிந்து பேருந்தில் ஏறுவதற்காக சென்ற விராட்டைக் காண பல ரசிகர்கள் கூடியிருந்தனர்.
அங்கு ஒரு மாற்றுத்திறனாளி ஒருவர் காத்திருந்தார். அவரை தூரத்தில் இருந்து பார்த்த விராட் கோலி தன்னுடைய ஜெர்ஸியை அவருக்கு பரிசாகக் கொடுத்து திரும்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மீது அன்பு செலுத்துவதில் விராட்டுக்கு இணை அவர்தான் என ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Wow it's great day my life @imVkohli he's 100th test match he's gifts me t shirts wow 😲 #viratkholi #ViratKohli100thTest #KingKohli pic.twitter.com/mxALApy89H
— dharamofficialcricket (@dharmveerpal) March 6, 2022
முன்னதாக விராட்டின் புஷ்பா ஸ்டைலும் இணையத்தில் ஹிட் அடித்தது. போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட்கோலி புஷ்பா படத்தில் மிகவும் புகழ்பெற்ற அல்லு அர்ஜூனின் மேனரிசமான தாடியை தடவுவதைப்போலவே விராட்கோலியும் தனது தாடியை தடவி காட்டினார். அவரது இந்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
#ThaggedheLe × @imVkohli 😎!!#ViratKohli𓃵https://t.co/ATjI3nHfiu pic.twitter.com/0F1DMlA2fI
— Jai..♡ (@Mr_Cupid_ForEvr) March 6, 2022
நேற்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினர். இரண்டாவது இன்னிங்சில் இந்திய பந்துவீச்சாளர் அஸ்வினும், ஜடேஜாவும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது ஷமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் அஸ்வின் டெஸ்டில் கபில்தேவை காட்டிலும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்