(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: அன்று "நெருப்பாய்"..! இன்று "நட்பாய்"..! லார்ட்சில் இணைந்த கைகளாக மாறிய கோலி - பார்ஸ்டோ..!
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் மோதிக்கொண்ட விராட்கோலியும், ஜானி பார்ஸ்டோவும் லார்ட்சில் சிரித்துப் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. எட்ஜ்பாஸ்டன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது. ஒருநாள் போட்டித் தொடர் 1-1 என்ற நிலையில் உள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்காக இந்திய மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயிற்சிக்காக இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட்கோலி மைதானத்திற்குள் வந்தார். அப்போது, எதிரே இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பார்ஸ்டோ வந்தார். பார்ஸ்டோவைப் பார்த்த விராட்கோலி புன்னகையுடன் கை கொடுத்து சிரித்து பேசினார், பாஸ்டோவும் கோலியுடன் சிரித்து சகஜமாக பேசினார்,
You have 5 seconds to Guess Their Conversation 💬👀@imVkohli 🤝 @jbairstow21 - Too much 🔥in one frame 🙌#ENGvIND #SonySportsNetwork pic.twitter.com/lPTq9cV3Yp
— Sony Sports Network (@SonySportsNetwk) July 14, 2022
முன்னதாக, எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது வாக்குவாதத்தில் ஈடுபட்ட பார்ஸ்டோவை பார்த்து விராட்கோலி வாயை மூடிகிட்டு பேட் பண்ணு என்று கூறினார். அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. போட்டியில் அன்றைய தினம் பார்ஸ்டோ – கோலி வாக்குவாதம்தான் மிகவும் ட்ரெண்டாகியது. அதேசமயம், ஜானி பார்ஸ்டோ அந்த இன்னிங்சில் சதமடித்தபோது விராட்கோலி கைதட்டி பாராட்டவும் செய்தார். விராட்கோலியின் அந்த பண்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் மோதிக்கொண்ட விராட்கோலியும், ஜானி பார்ஸ்டோவும் லார்ட்ஸ் மைதானத்தில் சிரித்துப் பேசியது அவர்களது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க : Virat Kohli Perfomance : ரன் மெஷினுக்கு என்னாச்சு..? "சதங்களின் நாயகன்" சறுக்கல்களில் இருந்து மீள்வது எப்போது..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்