Virat Kohli Sick: "விராட்னா சும்மாவா..?" காய்ச்சலுடன் ஆடி ஆஸ்திரேலியாவை காய்ச்சி எடுத்த விராட்கோலி..! நெகிழும் ரசிகர்கள்..!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அபார சதம் அடித்த விராட்கோலி காய்ச்சலுடன் ஆடி சதமடித்தாக தெரியவந்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும் இந்திய அணிக்கு மகிழ்ச்சியான போட்டியாகவே அமைந்துள்ளது. ஏனெ்னறால், இந்த போட்டி மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்னொன்று 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு விராட்கோலி சதம் விளாசியது.
காய்ச்சலுடன் சதம்:
இந்த போட்டியில், 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 59 ரன்களுடன் இருந்த விராட்கோலி நான்காவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். காலையில் களமிறங்கிய விராட்கோலி 9வது விக்கெட்டாக மாலையில்தான் ஆட்டமிழந்து வெளியேறினார். அபாரமாக ஆடி இரட்டைசதம் வரை நெருங்கிய விராட்கோலி அன்றைய தினத்தில் ஆடிய நிலை ரசிகர்களை நெகிழ்ச்சி அடையவைத்தது.
நான்காவது நாள் ஆட்டத்தை தொடங்கிய விராட்கோலி காய்ச்சலுடன் பேட்டிங் செய்ய களமிறங்கியது தெரியவந்துள்ளது. காய்ச்சலுடன் களமிறங்கிய விராட்கோலி விடாத மன உறுதியுடன் களத்தில் நின்று அன்றைய தினம் மட்டும் 127 ரன்களை எடுத்துள்ளார். விராட்கோலியின் அபார சதம் குறித்து அவரது மனைவி அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த சூழலில் நோயுடன் விளையாடி, என்னை எப்போதும் ஊக்குவித்துள்ளீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
விராட் கம்பேக்:
இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் விராட்கோலியை பாராட்டி வருகின்றனர். இரண்டரை ஆண்டுகாலமாக எந்தவொரு போட்டியிலும் சதம் விளாச விராட்கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து முன்னணி வீரர்கள் உள்பட பலரும் விமர்சித்தனர். இந்த நிலையில், கடந்தாண்டு ஆசியக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து கம்பேக் அளித்தார்.
அடுத்து வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசினார். டி20, ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசிய விராட்கோலிக்கு டெஸ்ட் சதம் மட்டும் கடந்தாண்டு கிட்டவில்லை. இந்த சூழலில், இந்தாண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கட்டாயம் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி, கடைசி டெஸ்டில் சதம் விளாசி அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் 75 சதம் விளாசிய விராட்கோலிக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் உற்சாகம்:
இந்திய அணி இன்னும் சில மாதங்களில் உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் பங்கேற்க இருக்கும் சூழலில், விராட்கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விராட்கோலி 4வது டெஸ்ட் போட்டியில் 364 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகளை விளாசி 186 ரன்களை குவித்தார். கடந்த 14 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட விளாசாத விராட்கோலி மீது பெரும் சர்ச்சைகள் குவிந்த நிலையில், அவர் 186 ரன்கள் குவித்து அசத்தியது பெரும் உற்சாகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
மேலும் படிக்க:Ashwin on Pujara: நான் வேண்டுமானால் கிரிக்கெட்டை விட்டு வெளியேறவா? அஸ்வினின் இந்த ட்வீட்க்கு என்ன காரணம்?
மேலும் படிக்க: IND vs AUS, 4th Test: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி: தொடரை வென்றது இந்தியா..!