Vijay Hazare Trophy 2021: 3 இன்னிங்ஸில் 3 சதங்கள்... தொடரும் ருதுராஜின் ருத்ரதாண்டவம்!
2021-2022 விஜய் ஹசாரே சீசனில் வெறும் 3 இன்னிங்ஸில் 400 ரன்களை கடந்து அசத்தி இருக்கிறார் ருதுராஜ்.
இந்தியாவின் முக்கிய உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடர் டிசம்பர் 8-ம் தேதி தொடங்கியது. 38 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கேக்வாட். அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தொடர் ஆரம்பித்து நான்கு தினங்களே ஆன நிலையில், 3 முறை சதம் அடித்து அசத்தி இருக்கிறார் ருதுராஜ்.
டிசம்பர் 8-ம் தேதி மத்திய பிரதேசம் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும், டிசம்பர் 9-ம் தேதி சட்டிஸ்கர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும், சதங்களை விளாசி இருக்கிறார் ருதுராஜ். இந்த இரண்டு போட்டிகளிலும் மகாராஸ்டிரா அணி வெற்றி பெறுவதற்கு ருது மிக முக்கிய பங்காற்றி இருக்கிறார்.
Wake Up ✅
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) December 11, 2021
Pad Up ✅
R🦁AR ✅
RUTeen Status: 💯#VijayHazareTrophy #WhistlePodu 💛 pic.twitter.com/HirbDAhDEm
ருதுராஜ் ருத்ர தாண்டவம்:
vs மத்திய பிரதேசம் - 136 (112) - 14 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்
vs சட்டிஸ்கர் - 154* (143) - 14 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்
vs கேரளா - 124 (129) - 9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்
இதனை அடுத்து, இன்று கேரளாவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்திருக்கிறார் ருதுராஜ். இதன் மூலம், விஜய் ஹசாரே கோப்பையின் ஒரே சீசனில் அடுத்தடுத்து மூன்று சதங்கள் கடந்து வெளுத்து வாங்கி இருக்கிறார் ருதுராஜ். ஓப்பனிங் களமிறங்கும் ருதுராஜ், தொடர்ந்து அசத்தலாக விளையாடி வருவதை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Ruturaj Gaikwad completed 400 runs from just 3 matches in Vijay Hazare 2021-22.
— Johns. (@CricCrazyJohns) December 11, 2021
மேலும், 2021-2022 விஜய் ஹசாரே சீசனில் வெறும் 3 இன்னிங்ஸில் 400 ரன்களை கடந்து அசத்தி இருக்கிறார் இந்த சூப்பர் பேட்டர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்