சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இந்திய வீராங்கனை.. யார்?
Veteran Jhulan Goswami: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய பெண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜவுலான் கோசுவாமி தெரிவித்துள்ளார்.
Veteran Jhulan Goswami: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய பெண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜவுலான் கோசுவாமி தெரிவித்துள்ளார்.
ஒரு விளையாட்டு வீரர் தான் மிகவும் கனவு கண்டு விளையாட களம் இறங்கும் முதல் களம் எப்படி முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான களமும் அப்படிப்பட்டது தான். அதிலும் எல்லா வீரர்களுக்கும் தனது ஓய்வு தான் விரும்பியதைப் போல அமையாது. அதில் மிகவும், முக்கியமானது தான் விளையாடிக் கொண்டு இருக்கும் இந்தக் களம் தான் தனது கடைசி ஆடுகளம் என தெரிந்த பின்னர், ஒரு வீரர் களத்தில் இறங்கி விளையாட வரும்போது, அவருக்குள் இருக்கும் உணர்வானதை நாம் பார்த்தாலே மனதில் மிகவும் உணர்வுப் பாய்ச்சலாக இருக்கும். அதுவும் அந்த வீரர் நமக்கு மிகவும் பிடித்தமான வீரர் என்றால் ரசிகர்களாகிய நமது கண்ணீருக்கும் கைத்தட்டலுகும் ஈடான பரிசு, அந்த வீரருக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படி இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு சில வீரர் மற்றும் வீராங்கனைகளே தங்களின் கடைசி விளையாட்டை அவர்களாகவே அறிவித்து விளையாட களம் இறங்கியிருக்கிறார்கள். அப்படி தங்களின் கடைசி ஆட்டத்தை வீரர்கள் விளையாட வரும் போது, மைதானம் நிறைந்த ரசிகர்களுக்கு மத்தியில் அந்த வீரர் களம் இறங்கையில் ஏற்படும் ஆரவாரம் தான் அந்த வீரருக்கான களத்தில் செலுத்தப்படும் கடைசி மரியாதை.
Veteran Jhulan Goswami set to play farewell match at Lord's
— ANI Digital (@ani_digital) August 20, 2022
Read @ANI Story | https://t.co/mpyf4971io#JhulanGoswami #IndVsEng #Cricket pic.twitter.com/gV0NI8poUd
அப்படி தனது, கடைசி போட்டியை அறிவித்துள்ளார், இந்திய பெண்கள் கிரிகெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர், ஜவுலான் கோசுவாமி. அவர் வரும் செப்டம்பர் மாதம் 24ம் தேதி இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடக்கவுள்ள மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியுடன் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். எதிர் வரும் செப்டம்பர் மாதம் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் கலந்து கொள்ளவிருக்கிறது. இதில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மிகவும் முக்கியமான வீராங்கனையான 39 வயதான ஜவுலான் கோசுவாமி, செப்டம்பர் 24ல் நடைபெறும் தொடரின் இறுதி மற்றும் மூன்றாவது கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்த தொடரில், 10,13,15 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், 18, 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவுள்ளன.
இதில் மூன்றாவது கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள மிகப்பெரிய மைதானமான லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. உலகப்புகழ் பெற்ற இந்த மைதானத்தில் தான் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவுலான் கோசுவாமி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற விருக்கிறார். ஜவுலான் கோசுவாமி இதுவரை இந்திய அணிக்காக இதுவரை 12 டெஸ்ட் போட்டிகள், 68 டி20 போட்டிகள் மற்றும் 201 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், அவர், டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 56 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 252 விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற தனது பணியினை மிகவும் சிறப்பாக செய்துள்ளார். அணியின் சீனியர் வீராங்கனையான ஜவுலான் கோசுவாமி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி அணி நிர்வாகம் அவருக்கு பிரியா விடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.