லீக் தொடர்களுக்காக சர்வதேச போட்டிகளை புறக்கணித்த போல்ட்… உலகக்கோப்பையில் மீண்டும் எண்ட்ரி?
நட்சத்திர பந்து வீச்சாளரான அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை விட லீக் தொடர்களில் விளையாடுவதை விரும்பியதால் அவர் தனது நாட்டின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிக்கொண்டர்.
வரவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் டிரென்ட் போல்ட் நியூசிலாந்து அணிக்காக களமிறங்குவார் என்று தெரிகிறது. ஏனெனில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர், உலகெங்கிலும் உள்ள பல்வேறு லீக் தொடர்களில் பங்கேற்பதற்காக தனது நாட்டின் ஒப்பந்த பட்டியலில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். சமீபத்தில் நியூசிலாந்து அணி சர்வதேச போட்டிகள் ஆடும்போதே அவர், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிக்கொண்டிருந்தார்.
லீக் தொடருக்காக சர்வதேச போட்டிகளை புறக்கணித்தார்
நட்சத்திர பந்து வீச்சாளரான அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை விட லீக் தொடர்களில் விளையாடுவதை விரும்பியதால் அவர் தனது நாட்டின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிக்கொண்டார். ஆனால் தற்போது உலகக்கோப்பை 2023 இல் மீண்டும் அணிக்கு திரும்பி பங்காற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 33 வயதான அவர் மூன்று வடிவங்களிலும் ஆடும் நவீன ஜாம்பவான்களில் ஒருவர் ஆவார். அதோடு அவரது அனுபவம் வரவிருக்கும் உலகக் கோப்பையில் நியூஸி அணிக்கு இன்றியமையாததாக இருக்கும்.
டிரெண்ட் போல்ட் விளையாடுவார்
இந்த ஆண்டு இறுதியில் இந்தியா உலகக்கோப்பை தொடரை நடத்த தயாராக உள்ள நிலையில், நியூசிலாந்து அணிக்கு இதுவரை கனவாகவே இருக்கும், கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சிக்கும். வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் போட்டியில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டதால், அவர் விளையாடுவார் என்று தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் நம்புகிறார். மேலும் உலகக் கோப்பைக்கு தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மற்ற போட்டிகளில் விளையாடுவாரா?
"அவர் உலகின் சிறந்த ODI பந்துவீச்சாளர்களில் ஒருவர், அதனால் காயம் எதுவும் ஏற்படாமல் இருந்ததால, அவர் எங்கள் அணியின் ஒரு பகுதியாக கண்டிப்பாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்," என்றார். மேலும் மற்ற போட்டிகளிலும் அவர் விளையாடுவாரா என்று கேட்டதற்கு, "நாங்கள் இன்னும் அதுகுறித்து பேசி வருகிறோம், உரையாடல்கள் இன்னும் முடியவில்லை," என்று ஸ்டெட் பதிலளித்தார்,
ஆடம் மில்னே
நியூசிலாந்து கிரிக்கெட் சமீபத்தில் நாட்டின் மத்திய ஒப்பந்தம் பெற்ற வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் ஆடம் மில்னே கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக இடம் பெற்றார். வேகப்பந்து வீச்சாளர் பல ஆண்டுகளாக சில நிலையான செயல்திறனைக் கொண்டிருந்த நிலையில் முதன்முறையாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர் வெளியிடப்பட்ட 20 வீரர்கள் பட்டியலில் ஒரு பகுதியாக உள்ளார். "அவர் ஒரு உயர்தர பந்துவீச்சாளராக பல ஆண்டுகளாக உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் கூட அவரது நிலையான செயல்திறன் அணிக்கு பெரிதும் உதவியது," என்று ஸ்டெட் மில்னேவை பாராட்டினார்.
2023/24க்கான மத்திய ஒப்பந்தத்தில் உள்ள நியூசிலாந்து வீரர்கள்:
ஃபின் ஆலன், டாம் ப்ளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி ஃபெர்குசன், மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லதம், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிமிஷீ சான்ட்னர், நீல் வாக்னர், கேன் வில்லியம்சன், வில் யங்.