மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்தது என்ன? இன்றைய தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- கோடை காலத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள மத்திய அரசின் வழிகாட்டுதல்களை நடைமுறைபடுத்த வேண்டும் - மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவு
- மழைக்காலங்களில் சென்னையை வெள்ளம் சூழ்வது தடுக்கப்படுமா? முதலமைச்சர் ஸ்டாலினிடம் அதிகாரிகள் அறிக்கை சமர்பிப்பு
- சென்னையில் சில இடங்களில் ஆவீன் பால் தட்டுப்பாடு - கொள்முதல் விலையை உயர்த்தக் கோறும் உற்பத்தியாளர்கள்.
- ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி
- திருவாரூர் அருகே வடுவூரில் 7 கோடி ரூபாய் செலவில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு
- நிலம் கையகப்படுத்துவதை கைவிட வலியுறுத்தல் - நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- கோவையில் உள்ள மத்திய அரசின் வனத்துறை அதிகாரிகள் பணித்தேர்வில் மோசடி- ஆள்மாறட்டத்தில் ஹரியானாவை சேர்ந்த 4 பேர் கைது
- தொப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
- சென்னை ஐஐடி மூன்றாம் ஆண்டு மாணவன் தற்கொலை - பின்னணியை ஆராய ஆசிரியர்கள் மாணவர்கள் அடங்கிய குழு அமைப்பு
- குடிநீர் தொட்டியில் இதுவரை மனித கழிவை கலந்தவர்களை கைது செய்யாது ஏன் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
- தங்கம் விலை 3 நாட்களில் ரூபாய் 1600 அதிகரிப்பு
இந்தியா:
- தகவல் திருட்டு உள்ளிட்ட மொபைல் போன் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு முடிவு - புதிய பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை
- கோடைகால சவால்களை சமாளிக்க மாநில அரசுகள் தயாராகவேண்டும் - மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜூவ் கௌபே வலியுறுத்தல்
- பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு - வரும் 19ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி
- ஜோகோ நிறுவனத்தின் ஸ்ரீதர் மீது அவரது மனைவி சராமாரி குற்றச்சாட்டு
- ராகுல் காந்தயின் லண்டன் பேச்சு, அதானி நிறுவனங்கள் குறித்து ஆளிம், எதிர் கட்சிகள் தொடர் அமளி - 2வது நாளாக முடங்கிய பாராளுமன்றம்
- வெங்காய விலை வீழ்ச்சிக்கு எதிர்ப்பு - மகாரஸ்ட்ராவில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி
- 2000 ருபாய் நோட்டுகள் அச்சிடுவது 2019ம் ஆண்டே நிறுத்தம் - மத்திய அரசு தகவல்
உலகம்:
- அமெரிக்க ட்ரோனை வீழ்த்தியது ரஷ்ய விமானம் - அமெரிக்கா கண்டனம்
விளையாட்டு:
- மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 5 வெற்றிகளைக் குவித்து சாதனை - குஜராத் அணியை 55 ரன்கள் வித்தியாச்த்தில் வீழ்த்தியது.
- மகளிர் பிரீமியர் லீக்கில் அதிரடியாக ப்ளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion