மேலும் அறிய

TNPL 2024 Final: டிஎன்பிஎல் சாம்பியன் பட்டம் வென்ற அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் - மற்ற பரிசுகள் யாருக்கு?

TNPL 2024 Final: தமிழ்நாடு பிரீமியர் லீக் எனும் கிரிக்கெட் போட்டியில், கோவை அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

TNPL 2024 Final: டிஎன்பிஎல் போட்டியில் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

டிஎன்பிஎல் ஃபைனல்:

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பந்துவீச்சில் மிரட்டிய திண்டுக்கல்:

இதையடுத்து களமிறங்கிய கோவை அணி வீரர்கள் ஆரம்பம் முதலே ரன் சேர்க்க தடுமாறினர். நிலைத்து நின்று ஆடி ரன் சேர்க்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்துக் கொண்டே இருந்தனர். ஓரளவிற்கு நிலைத்து நின்று ஆடிய ராம் அரவிந்த் 27 ரன்களையும், அதீக் உர் ரஹ்மான் 25 ரன்களையும் சேர்த்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே சேர்த்தது. திண்டுக்கல் அணி சார்பில் சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி மற்ரு விக்னேஷ் புதூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.’

சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல்:

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான விமல் குமார் மற்றும் ஷிவம் சிங் ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தனர். இருப்பினும் மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் அஷ்வின் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக ரன் சேர்த்த இந்திரஜித் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே, 3 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட, 52 ரன்கள் சேர்த்து அஷ்வின் பெவிலியன் திரும்பினார். இறுதியில் சரத்குமாரின் அதிரடியான ஆட்டத்தால், 18.2 ஓவர்களிலேயே திண்டுக்கல் அணி இலக்கை எட்டியது. இதனால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற திண்டுக்கல், டிஎன்பிஎல் வரலாற்றில் முதல்முறையாக கோப்பைய வென்று அசத்தியது. அவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான, ராகுல் டிராவிட் கோப்பையை வழங்கினார். இதனிடயே, தொடர்ந்து மூன்றாவது முறையாக டிஎன்பிஎல் கோப்பயை வென்ற முதல் அணி என்ற, சாதனையை படைக்கும் வாய்ப்பை கோவை அணி தவறவிட்டது குறிப்பிடத்தக்கத்து.

தனிநபர்களுக்கான பரிசுகள்:

  • பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய அஷ்வின், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
  • தொடரில் 364 ரன்கள் சேர்த்த திண்டுக்கல் அணியின் ஷிவம் சிங் ஆரஞ்சு தொப்பியை வென்றார்
  • தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய பொய்யாமொழி ஊதா தொப்பியை வென்றார்
  • தொடர் நாயகன் விருதை கோவை அணி கேப்டன் ஷாருக்கான் தட்டிச் சென்றார்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin Letter : ”இது தான் திமுகவின் 75 ஆண்டுகால சாதனை” அமெரிக்காவில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இது..!
MK Stalin Letter : ”இது தான் திமுகவின் 75 ஆண்டுகால சாதனை” அமெரிக்காவில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இது..!
2026 தேர்தலில் கூட்டணிகள் சிக்கல்.. விஜய் வந்தால் கூட... வெளிப்படையாக பேசிய திருமா 
2026 தேர்தலில் கூட்டணிகள் சிக்கல்.. விஜய் வந்தால் கூட... வெளிப்படையாக பேசிய திருமா 
Breaking News LIVE: ஓணம் பண்டிகை, புரட்டாசி சிறப்பு பூஜை: சபரிமலை நடை திறப்பு
Breaking News LIVE: ஓணம் பண்டிகை, புரட்டாசி சிறப்பு பூஜை: சபரிமலை நடை திறப்பு
கொளத்தூர் , காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் சக்கரபாணி - என்ன தெரியுமா ?
கொளத்தூர் , காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் சக்கரபாணி - என்ன தெரியுமா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Akash Chopra on Rohit Sharma | வெளியேறும் ரோஹித்? இப்படி பண்ணிட்டீங்களே மும்பை! சோகத்தில் ரசிகர்கள்Fire Accident | மகளிர் விடுதியில் தீ விபத்து!பரிதாபமாக பிரிந்த உயிர்கள்..FRIDGE வெடித்து பயங்கரம்Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Letter : ”இது தான் திமுகவின் 75 ஆண்டுகால சாதனை” அமெரிக்காவில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இது..!
MK Stalin Letter : ”இது தான் திமுகவின் 75 ஆண்டுகால சாதனை” அமெரிக்காவில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இது..!
2026 தேர்தலில் கூட்டணிகள் சிக்கல்.. விஜய் வந்தால் கூட... வெளிப்படையாக பேசிய திருமா 
2026 தேர்தலில் கூட்டணிகள் சிக்கல்.. விஜய் வந்தால் கூட... வெளிப்படையாக பேசிய திருமா 
Breaking News LIVE: ஓணம் பண்டிகை, புரட்டாசி சிறப்பு பூஜை: சபரிமலை நடை திறப்பு
Breaking News LIVE: ஓணம் பண்டிகை, புரட்டாசி சிறப்பு பூஜை: சபரிமலை நடை திறப்பு
கொளத்தூர் , காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் சக்கரபாணி - என்ன தெரியுமா ?
கொளத்தூர் , காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் சக்கரபாணி - என்ன தெரியுமா ?
Watch Video:
Watch Video: "புயலிலும் மாறாத மனிதநேயம்" ஸ்கூட்டி ஓட்டுநரை பாதுகாத்த கார்கள் - நீங்களே பாருங்க
சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகத்தில் இன்று முதல் சிறப்புப்பேருந்துகள்
சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகத்தில் இன்று முதல் சிறப்புப்பேருந்துகள்
Yagi: 226 பேர் மரணம்! 15 ஆயிரம் பேர் பாதிப்பு! வியட்நாமையே சிதைத்த யாகி புயல்!
Yagi: 226 பேர் மரணம்! 15 ஆயிரம் பேர் பாதிப்பு! வியட்நாமையே சிதைத்த யாகி புயல்!
இரவெல்லாம் பவர் கட், கொசுக்கடி: தூக்கமில்லாமல் தவித்த சென்னை! காரணம் என்ன?
இரவெல்லாம் பவர் கட், கொசுக்கடி: தூக்கமில்லாமல் தவித்த சென்னை! காரணம் என்ன?
Embed widget