மேலும் அறிய

2023 World Cup: 2019-ல் கதாநாயகர்கள்..! இந்தாண்டு கரைந்தவர்கள்... 2023 உலகக் கோப்பையில் இடம்பெறாத டாப் 3 வீரர்கள்!

சிறப்பாக விளையாடிய மூன்று வீரர்கள் இந்த வருட உலக கோப்பையில் விளையாடப் போவதில்லை.

2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரானது வருகின்ற அக்டோபர் மாதம் 5ம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றனர். முதல் 8 அணிகள் நேரடியாக உலக கோப்பைக்கு முன்னேறியது. மீதம் உள்ள இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்காக ஜிம்பாப்வேயில் தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் நெதர்லாந்து கடைசி இரண்டு அணிகளாக தேர்வாகின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பைக்கு நுழைய முடியவில்லை. அதே போல் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் நட்சத்திர வீரர்களாக ஜொலித்த மூன்று வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் விளையாட போவதில்லை.

2023 World Cup:  2019-ல் கதாநாயகர்கள்..! இந்தாண்டு கரைந்தவர்கள்... 2023 உலகக் கோப்பையில் இடம்பெறாத டாப் 3 வீரர்கள்!

2019 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பல சுவாரசியமான விஷையங்களும், சிறப்பான தருனங்களும் நிகழ்ந்தன . இதில் சிறப்பாக விளையாடிய மூன்று வீரர்கள் இந்த வருட உலக கோப்பையில் விளையாடப் போவதில்லை. அவர்களை பற்றிய சுவாரசியமான தகவல் இதோ!

3 .ஆரோன் ஃபின்ச் - ஆஸ்திரேலியா 

2023 World Cup:  2019-ல் கதாநாயகர்கள்..! இந்தாண்டு கரைந்தவர்கள்... 2023 உலகக் கோப்பையில் இடம்பெறாத டாப் 3 வீரர்கள்!

இந்த நட்சத்திர பட்டியலில் மூன்றாவது இடம் பிடிப்பவர் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச். இவர் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த இவர், இதுவரை ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களுடன் 5000 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல், டி20யில் 2 சதங்களுடன் 3000 ரன்களையும் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய காரணத்தினால் அவரை 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட மறுத்தது ஐ.சி.சி. இதனால் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்காக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஆரோன் ஃபின்ச் பொறுப்பெற்று அணியை வழி நடத்தி சென்றார். 

உலகக் கோப்பை போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அணியின் இரண்டாவது அதிகபட்ச ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையும், அதே தொடரில் 10 போட்டிகளில் களமிறங்கி 507 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 7வது இடத்தையும் பிடித்தார் ஆரோன் ஃபின்ச்.

ஆரோன் ஃபின்ச் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அரைசதம் விளாசினார். அதன் தொடர்ச்சியாக நடந்த 4 போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் விளாசியவர் என்ற சாதனையையும் தனதாக்கினார். இதில் இலங்கைக்கு எதிராக 132 ரன்களும் , இங்கிலாந்துக்கு எதிராக 116 ரன்களும் அடங்கும். 2019 உலக கோப்பை போட்டியை அரையிறுதிவரை அழைத்து சென்ற ஆரோன் ஃபின்ச் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட போவதில்லை.

2. முகமது அமீர்

2023 World Cup:  2019-ல் கதாநாயகர்கள்..! இந்தாண்டு கரைந்தவர்கள்... 2023 உலகக் கோப்பையில் இடம்பெறாத டாப் 3 வீரர்கள்!

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இந்த நட்சத்திர பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.  இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். இந்தநிலையில், அமீர் வருகின்ற 2023 உலகக் கோப்பையில் விளையாட போவதில்லை. 2020 அணி நிர்வாகத்தால் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாக கூறி  சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி சமீபத்தில் அமீரிடம் உங்களுக்கான கதவு திறந்தே இருக்கும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் அணிக்குள் திருப்பி வரலாம் என்று கூறினார்.

2019 உலக கோப்பை போட்டியில் முகமது அமீர் மொத்தமாக 17 விக்கெட்டை வீழ்த்தினார். அதிலும் இங்கிலாந்துக்கு எதிராக 2/69, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2/49 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். தற்போது சர்வதேச போட்டியில் இருந்து விலகி இருக்கும் அமீர், ஐபிஎல் போன்று பிற நாடுகளில் நடக்கும் தொடர்களில் விளையாடி வருகிறார்.

1. பென் ஸ்டோக்ஸ்

2023 World Cup:  2019-ல் கதாநாயகர்கள்..! இந்தாண்டு கரைந்தவர்கள்... 2023 உலகக் கோப்பையில் இடம்பெறாத டாப் 3 வீரர்கள்!

இந்த நட்சத்திர பட்டியலில் முதல் இடம் பிடிப்பவர் தற்போதைய இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.

இப்படியான சூழ்நிலையில் அதிக அழுத்தம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்தார்.

சமீப காலமாக பென் ஸ்டோக்ஸ் பலவிதமான காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது இங்கிலாந்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் நடக்கும் ஆஷஸ் போட்டிகளிலும் கூட அவர் காயத்துடன்தான் விளையாடினார். அனைத்தும் விதமான போட்டிகளிலும் ஆல் ரவுண்டராக வளம் வந்த பென் ஸ்டோக்ஸ் தற்போது ஒருநாள் போட்டியில் இருந்து விலகி இருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவே.

2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 84 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற பென் ஸ்டோக்ஸ்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இவர் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட போவதில்லை என்பது இங்கிலாந்து ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget