நிர்வாகம் எடுத்த விபரீத முடிவு: மயக்கமடைந்த கிரிக்கெட் வீரர்கள் - வெஸ்ட் இண்டீஸில் நடந்தது என்ன?
அணி நிர்வாகத்தின் விபரீத முடிவால் மயக்கமடைந்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள். என்ன நடந்தது வீரர்களுக்கு?
அணி நிர்வாகத்தின் விபரீத முடிவால் மயக்கமடைந்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள். மயக்கமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் மூன்று ஒருநாள் கிரிக்கெட், மூன்று டி-20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது பங்களாதேஷ் அணி. இதில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து முதல் டி-20 போட்டிகளில் விளையாட செயிண்ட் லூசியாவில் இருந்து, டொம்னிகாவிற்கு செல்ல பங்களாதேஷ் வீரர்களுக்கு கடல் வழி பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மொத்தம் 180 கிலோமீட்டர் கடல் பயணத்தினை ஒரு சொகுசு கப்பலைக் கொண்டு கடக்க அணி நிர்வாகத்தால், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் பயணத்தினை தொடங்கிய பங்களாதேஷ் அணி வீரர்களின் நிலை முதலில் சீராகத்தான் இருந்தது. கப்பல் நடுக்கடலை அடைந்ததும், கடல் பயணத்தில் பெரும் அனுபவம் இல்லாத பங்களாதேஷ் அணி வீரர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் கப்பலை செயிண்ட் லூசியாவிற்கும் திரும்ப முடியாமல், உடனடியாக டொம்னிகாவிற்கும் செல்ல முடியாமல் கப்பலை அதன் சீரான வேகத்தில், டொம்னிகாவிற்கு இயக்கியுள்ளனர். கரையை அடைந்ததும் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களுக்கு, முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் இன்று இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடக்கவுள்ள முதல் டி-20 போட்டி நடைபெறுவதில் எந்த விதமான சிக்கலும் இருக்காது, என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி டி-20 உலககோப்பை போட்டியில் பங்கேற்று கோப்பையை வெல்ல அங்கீகரிக்கப்பட்ட அணிகள் அனைத்தும், மற்ற அணிகளுடன் டி-20 போட்டித் தொடர்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், பங்களாதேஷ் அணி வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள உடல் நிலை மாற்றம் அணி வீரர்களின் சீரான உடல்நிலையினை பாதிக்குமா என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படியான கப்பல் பயண முடிவினை எடுத்தது குறித்து அணி நிர்வாக நிர்வாகிகளுக்கும் அணி வீரர்களுக்கும் இடையில் உரசல்கள் ஏற்பட்டுள்ளது. விமான பயணத்தினையே இனி எப்போதும்போல பின்பற்றப்படும் எனவும் அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்