(Source: ECI/ABP News/ABP Majha)
Gabba Stadium: 2023 ஒலிம்பிக்குக்காக இடிக்கப்பட இருக்கும் ஸ்டேடியம்.. புத்தம்புதிய பிறவி எடுக்கப்போகும் ’தி காபா’ !
2032 ஒலிம்பிக்கிற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபலமான பிரிஸ்பேன் கிரிக்கெட் ஸ்டேடியம் இடித்து மீண்டும் கட்டப்பட உள்ளது.
2032 ஒலிம்பிக்கிற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபலமான பிரிஸ்பேன் கிரிக்கெட் ஸ்டேடியம் இடித்து மீண்டும் கட்டப்பட உள்ளது. ‘ தி காபா’ என்று பிரபலமாக அறியப்படும் கிரிக்கெட் ஸ்டேடியம் வருகின்ற 2032 ஒலிம்பிக் நடத்துவதற்கு மைய இடமாக பார்க்கப்படுகிறது.
அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கையின்படி , ஸ்டேடியத்தை மீண்டும் கட்டும் திட்டத்தை குயின்ஸ்லாந்து மாநிலத்தின் துணைப் பிரதமர் ஸ்டீவன் மைல்ஸ் நேற்று உறுதிப்படுத்தினார். இந்த திட்டத்திற்காக சுமார் 2.7 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவிடப்பட இருக்கிறது.
இந்த ஸ்டேடியம் கட்டப்படும்போது, கிரிக்கெட் அணிகள் மற்றும் ஆஸ்திரேலிய கால்பந்து லீக்கில் முன்னணி கிளப்பான பிரிஸ்பேன் லயன்ஸ் ஆகியவையும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது.
The Gabba cricket stadium set to be demolished and rebuilt for the 2032 Olympics. (ESPN) pic.twitter.com/j70LAUXame
— CricketMAN2 (@ImTanujSingh) November 24, 2023
ஸ்டேடியம் முழுவதுமாக புனரமைக்கப்படும் வேளையில், ஸ்டேடியத்தை சுற்றியுள்ள வளாகமும் மேம்படுத்தப்பட்டு, அதற்கு கிழக்குக் கரை என்று பெயரிடப்பட இருக்கிறது. வெளியான தகவலின்படி, ஸ்டேடியத்தில் மறுசீரமைப்பு கணக்கின்படி இருக்கை 42,000 லிருந்து 50,000 ஆக அதிகரிக்கும் என்றும், விளையாட்டு இல்லாத நிகழ்வுகளுக்கு, திறன் மேலும் 80,000 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேடியத்தை விரிவாக்கும் பணியின்போது உள்ளூர் ஆரம்பப் பள்ளி இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது. காபா ஸ்டேடியம் கடந்த நூறாண்டுக்கு மேலாக ஆஸ்திரேலியாவின் மிகவும் மதிப்பிக்க ஸ்டேடியமாக பார்க்கப்படுகிறது. பிரிஸ்பேன் ஸ்டேடியம் இடிக்கும் பணிகள் 2025 ஆஷஸுக்குப் பிறகு தொடங்க உள்ளது.
பிரிஸ்பேன் 2032 ஒலிம்பிக் ஹோஸ்டாக ஜூலை 2021 இல் போட்டி ஏலம் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் மூலம், 1956ம் ஆண்டு மெல்போர்ன் மற்றும் 2000 ம் ஆண்டு சிட்னிக்குப் பிறகு ஒலிம்பிக்கை நடத்தும் மூன்றாவது ஆஸ்திரேலிய நகரமாக பிரிஸ்பேன் உருவெடுத்துள்ளது.
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நகரங்களின் பட்டியல்
ஆண்டு | ஒலிம்பிக் நடத்தப்பட்ட நகரம், நாடு |
---|---|
1896 | ஏதென்ஸ் கிரீஸ் |
1900 | பாரிஸ், பிரான்ஸ் |
1904 | செயிண்ட் லூயிஸ், அமெரிக்கா |
1906 | ஏதென்ஸ் கிரீஸ் |
1908 | லண்டன், இங்கிலாந்து |
1912 | ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் |
1916 | பெர்லின், ஜெர்மனி (முதலாம் உலக போரால் நடைபெறவில்லை) |
1920 | ஆண்ட்வெர்ப், பெல்ஜியம் |
1924 | பாரிஸ், பிரான்ஸ் |
1928 | ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து |
1932 | லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா |
1936 | பெர்லின், ஜெர்மனி |
1940 | டோக்கியோ, ஜப்பான் / ஹெல்சின்கி, பின்லாந்து (நடைபெறவில்லை) |
1944 | லண்டன், இங்கிலாந்து, யுகே (நடைபெறவில்லை) |
1948 | லண்டன், இங்கிலாந்து |
1952 | ஹெல்சின்கி, பின்லாந்து |
1956 | மெல்போர்ன், ஆஸ்திரேலியா |
1960 | ரோம், இத்தாலி |
1964 | டோக்கியா, ஜப்பான் |
1968 | மெக்சிகோ |
1972 | முனிச், ஜெர்மனி |
1976 | மாண்ட்ரீல், கனடா |
1980 | மாஸ்கோ |
1984 | லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா |
1988 | சியோல், தென் கொரியா |
1992 | பார்சிலோனா, ஸ்பெயின் |
1996 | அட்லாண்டா, அமெரிக்கா |
2000 | சிட்னி , ஆஸ்திரேலியா |
2004 | ஏதென்ஸ் கிரீஸ் |
2008 | பெய்ஜிங் , சீனா |
2012 | லண்டன் , இங்கிலாந்து, இங்கிலாந்து |
2016 | ரியோ , பிரேசில் |
2021 | டோக்கியோ , ஜப்பான் |
நடைபெற உள்ள ஒலிம்பிக் விவரங்கள்.. | |
2024 | பாரிஸ் , பிரான்ஸ் |
2028 | லாஸ் ஏஞ்சல்ஸ் , அமெரிக்கா |
2032 | பிரிஸ்பேன் , ஆஸ்திரேலியா |