மேலும் அறிய

Team India's Semi-Final History: 8-வது முறையாக உலகக்கோப்பை அரையிறுதி.. 3ல் மட்டுமே வெற்றி... இந்திய அணியின் சாதனையும், சோதனையும்!

கடந்த 7 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 ஆட்டங்களில் தோல்வியடைந்து வெளியேற வேண்டியதாயிற்று.

2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 15ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி விளையாடுவது இது 8வது முறையாகும். 13 உலகக் கோப்பைகளில் 8 முறை அரையிறுதியில் விளையாடியது உண்மையிலேயே பெரிய சாதனைதான். இருப்பினும், கடந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் குறைவாகவே இருந்தது. கடந்த 7 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 ஆட்டங்களில் தோல்வியடைந்து வெளியேற வேண்டியதாயிற்று. இதன்மூலம், அரையிறுதியில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 43 மட்டுமே ஆகும். 

1983 அரையிறுதி:

இந்திய அணி தனது முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டி 1983 இல் விளையாடி கோப்பையை வென்றது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அரையிறுதியில் இந்திய அணி போட்டியை நடத்தும் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கியது. இப்போட்டியில் முதலில் இங்கிலாந்து அணியை வெறும் 213 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தினர். அதன்பிறகு, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக எட்டி இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதிப் போட்டியில் சந்திக்க தயார் ஆனது. இந்த போட்டியில் 27 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, பேட்டிங்கில் 46 ரன்கள் எடுத்த லாலா அமர்நாத் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

1987 அரையிறுதி:

இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது. இம்முறையும் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த முறை இந்தியா தனது சொந்த மண்ணில் போட்டியை நடத்தியது. அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த இந்திய அணி 219 ரன்களுக்குச் சரிந்து தோல்வியை சந்தித்தது. 

1996 அரையிறுதி:

இந்தப் போட்டியும் இந்திய மைதானத்தில் நடைபெற்றதால், இந்திய அணி இங்கும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை எடுத்தது.  அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் எட்டாவது விக்கெட் விழுந்தவுடன், ஈடன் கார்டன் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் கோபமடைந்து சலசலப்பை உருவாக்கத் தொடங்கினர். இதன் பின்னர் போட்டியின் ஒரு பந்து கூட வீச முடியாத நிலை ஏற்பட்டதால் போட்டியின் முடிவு இலங்கைக்கு சாதகமாக வழங்கப்பட்டது.

2003 அரையிறுதி:

தென்னாப்பிரிக்காவில் 2003 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்தியா கென்யாவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் குவித்தது. பின்னர் 179 ரன்களுக்கு கென்யாவை சுருட்டி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. 

2011 அரையிறுதி:

இந்தப் போட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றது. மொஹாலியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 85 ரன்களின் உதவியால் 260 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 231 ரன்கள் மாத்திரமே எடுத்து தோல்வியை சந்தித்தது. 

2015 அரையிறுதி:

சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இங்கு முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 328 ரன்கள் குவித்து அபாரமாக ஆடியது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 47வது ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. உலகக் கோப்பை போட்டியில் இருந்தும் வெளியேறியது. 

2019 அரையிறுதி:

2019 உலகக் கோப்பையின் அரையிறுதியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு 240 ரன்கள் மட்டுமே இலக்காகக் கொடுத்தது. ஆனால் இந்திய அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
"சர்ப்ரைஸ் இருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!
Embed widget