T20 WC Ind vs Pak: ஹர்திக் பாண்ட்யாவை களமிறக்கியதுதான் இந்தியாவின் பின்னடைவுக்கு காரணம் - இன்ஜமாம் சொன்னது என்ன?
ஹர்திக் பாண்ட்யாவை களமிறக்கியதுதான் இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு என்று பாகிஸ்தான் கேப்டன் இன்ஜமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை டி20 போட்டித்தொடரில் துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தோல்வி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியனாலும் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததும், இந்திய அணிக்காக களமிறங்கிய வீரர்கள் சிலரின் பார்ம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் உடல்நலம் மற்றும் பார்ம் மிக கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல் ஹக் ஹர்திக் பாண்ட்யாவின் உடல்நிலையை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். இன்ஜமாம் அவரது சொந்த யூ டியூப் சேனலில் கூறியிருப்பதாவது,
“ ஹர்திக் பாண்ட்யா விளையாடியது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு. இந்தியா தனது அணித்தேர்வில் சரியான முடிவை எடுக்கவில்லை. பாபர்அசாம் தான் ஆடும் லெவனை மிகச்சரியாக தேர்வு செய்துள்ளார். ஆனால், இந்தியா அதை செய்யவில்லை.
ஹர்திக் பாண்ட்யா தனது தோளில் காயம் ஏற்பட்ட பிறகு அவரது தோளை அவர் தேய்ப்பார் என்று நான் கருதவில்லை. இதுபோன்ற முக்கியமான ஆட்டத்தில் எதிரணியினருக்கு காயப்பட்டு க்ளூ அளிக்கக்கூடாது. இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் காயம்படுவதை பார்த்துள்ளேன். ஆனால், அவர் காயம்பட்ட இடத்தை இதுபோன்று தேய்க்கமாட்டார். ஹர்திக் பாண்ட்யா தனது காயம்பட்ட தோளை தேய்த்தபோதே இந்திய அணி அதிக அழுத்தத்தின் கீழ் ஆடுகிறது என்ற க்ளு கிடைத்தது. இது நல்ல அறிகுறியல்ல. பின்னர் அவர் பந்துவீசவும் வரவில்லை. பீல்டிங் செய்யவும் வரவில்லை.
ஒருவேளை இந்தியா ஆறாவது பந்துவீச்சாளருடன் ஆடியிருந்தால் அது இன்னும் நன்றாக இருந்திருக்கும். முகமது ஹபீஸ் இரண்டு ஓவர்கள் வீசினார். அதுமட்டுமின்றி ஷோயிப் மாலிக்கும் பாகிஸ்தானில் இருந்தார்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா கடந்த போட்டியில் 11 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதுமட்டுமின்றி ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை அணிக்காக ஆடிய ஹர்திக் பாண்ட்யா பேட்ஸ்மேனாக மட்டுமே இரண்டாம் கட்ட ஐ.பி.எல். போட்டிகளில் களமிறங்கினார். ஆனால், அவர் பேட்டிங்கிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. பார்மிலே இல்லாமல் உடல் தேர்ச்சியில்லாத ஹர்திக் பாண்ட்யாவை அணியில் வைத்திருப்பது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது சரியா, தவறா.? முழு பிஸினஸாக மாறும் ஐபிஎல்.. என்ன சொல்லப்போகிறது எதிர்காலம்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்