Rohit Sharma: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்.. இந்திய அணிக்காகவும் ரோஹித் குவித்த ரெக்கார்ட் லிஸ்ட்!
இந்திய அணிக்காக முதன்முதலாக யார் 50 சிக்ஸர்கள் அடித்தார்கள் என்பது முதல் 600 சிக்ஸர்களை வரை அடித்த வீரர்கள் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
கடந்த திங்கள்கிழமை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் லூசியாவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டி20 உலகக் கோப்பை 2024 சூப்பர் எட்டு குரூப் 1 போட்டியில் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 41 பந்துகளில் 8 சிக்ஸர்கள் உதவியுடன் 92 ரன்கள் குவித்தார். இதன்மூலம், டி20 சர்வதேச போட்டிகளில் 200 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைத்தார். மேலும், ரோஹித் சர்மா இதுவரை டி20 போட்டிகளில் 203 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.
மேலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். 63 சிக்ஸர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் முதலிடத்திலும், 48 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக, ஜோஸ் பட்லர் 43 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும், சமீபத்தில் ஓய்வுபெற்ற டேவிட் வார்னர் 40 சிக்ஸர்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள்:
- ரோஹித் சர்மா - 149 இன்னிங்ஸில் 203 சிக்ஸர்கள்
- மார்ட்டின் கப்தில் - 118 இன்னிங்ஸில் 173 சிக்ஸர்கள்
- ஜோஸ் பட்லர் - 113 இன்னிங்ஸில் 137 சிக்ஸர்கள்
- கிளென் மேக்ஸ்வெல் - 103 இன்னிங்ஸில் 133 சிக்ஸர்கள்
- நிக்கோலஸ் பூரன் - 87 இன்னிங்ஸில் 132 சிக்ஸர்கள்
ஆகியோர் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளனர்.
இந்தநிலையில், இந்திய அணிக்காக முதன்முதலாக யார் 50 சிக்ஸர்கள் அடித்தார்கள் என்பது முதல் 600 சிக்ஸர்களை வரை அடித்த வீரர்கள் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
இந்திய அணிக்காக முதன்முதலாக 50 சிக்ஸர்கள் அடித்தவர் 1983ல் இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த கபில்தேவ்தான். அதேபோல், முதல் 100 சிக்ஸர்களை அடித்தவரும் இவர்தான்.
தொடர்ந்து இந்திய அணிக்காக 150 சிக்ஸர்களை அடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர், 200 சிக்ஸர்களை அடித்தவர் சவுரவ் கங்குலி ஆவர்.
Never seen any Player hammered 4 sixes vs Mitchell Starc in ICC Tournaments, But Rohit ...
— Richard Kettleborough (@RichKettle07) June 24, 2024
Rohit Sharma got into Vintage Mode, that set the tone for Team India 🇮🇳
29 Runs against Mitchell Starc is not everyone's cup of tea ☕ #INDvsAUS #RohitSharma pic.twitter.com/P8iCKV4qym
தொடர்ந்து, 250 சிக்ஸர்களை பதிவு செய்தவர் சச்சினும், 300 சிக்ஸர்களை அடித்தவர் எம்.எஸ். தோனியும் ஆவர். அதன்பிறகு, இந்திய அணிக்காக 350, 400, 450, 500, 550, 600 சிக்ஸர்கள் என அனைத்தையும் தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவே அடித்துள்ளார்.
சிக்ஸர்களின் இந்திய கிரிக்கெட் வரலாறு:
- கபில் தேவ் - 50 சிக்ஸர்கள்
- கபில் தேவ் - 100 சிக்ஸர்கள்
- சச்சின் டெண்டுல்கர் - 150 சிக்ஸர்கள்
- சவுரவ் கங்குலி - 200 சிக்ஸர்கள்
- சச்சின் டெண்டுல்கர் - 250 சிக்ஸர்கள்
- எம்.எஸ்.தோனி - 300 சிக்ஸர்கள்
- ரோஹித் சர்மா - 350 சிக்ஸர்கள்
- ரோஹித் சர்மா - 400 சிக்ஸர்கள்
- ரோஹித் சர்மா - 450 சிக்ஸர்கள்
- ரோஹித் சர்மா - 500 சிக்ஸர்கள்
- ரோஹித் சர்மா - 550 சிக்ஸர்கள்
- ரோஹித் சர்மா - 600 சிக்ஸர்கள்
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தற்போது வரை 610 சிக்ஸர்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:
வீரர் (நாடு) |
போட்டிகள் |
சிக்ஸர்கள் |
ரோஹித் சர்மா (இந்தியா) |
478 |
610 |
கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) |
483 |
553 |
ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்) |
524 |
476 |
பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) |
432 |
398 |
மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து) |
367 |
383 |
எம்எஸ் தோனி (இந்தியா) |
538 |
359 |
சனத் ஜெயசூர்யா (இலங்கை) |
586 |
352 |
இயோன் மோர்கன் (இங்கிலாந்து) |
379 |
346 |
ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) |
361 |
340 |
ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) |
420 |
328 |