T20 World Cup 2022: டி 20 உலகக்கோப்பையில், அதிக போட்டிகளில் விளையாடிய கேப்டன்கள் யாருன்னு தெரியுமா?
T20 World Cup 2022:டி20 உலகக்கோப்பையில் அதிக போட்டிகளில் அணியை வழிநடத்திய கேப்டன்கள் யார் என்று யார் தெரியுமா? டாப் 3ல் உள்ளவர்கள் இவர்கள் தான்.
T20 World Cup 2022: டி20 உலககோப்பையில் அதிக போட்டிகளில் அணியை வழிநடத்திய கேப்டன்கள் யார் என்று யார் தெரியுமா? டாப் 3-இல் உள்ளவர்கள் இவர்கள்தான்.
ஐசிசி டி20 உலககோப்பை போட்டித் தொடர் இந்த மாதத்தின் 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தகுதிச் சுற்று போட்டிகளும் அதன் பின்னர் லீக் போட்டிகளும் தொடர்ந்து நடைபெறவுள்ளன. தகுதிச் சுற்றில் தகுதி பெறும் நான்கு அணிகள் மற்ற எட்டு அணிகளுடன் இணைந்து சூப்பர் 12 சுற்றில் இருந்து லீக் தொடர் ஆரம்பம் ஆகும்.
2007 முதல் ஐசிசி உலககோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை ஏழு டி20 உலககோப்பை போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது. இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் மேற்கு இந்திய அணிகள் இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளன.
முதல் டி20 உலககோப்பையை இந்திய அணி கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி தலைமையில் வென்றது. அதன் பின்னர் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லவில்லை. தோனி தலைமையிலான அணி, விராட் தலைமையிலான அணி என ஒவ்வொரு முறையும் இந்திய அணி முயன்றும் ஏமாற்றமே அடைந்தது. தற்போது கேப்டன் ரோகித் தலைமையிலான அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் இறங்கவுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே கிரிக்கெட்டில் அதன் பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதவுள்ளது. இந்த டி20 உலககோப்பை தொடரின் முதல் லீக் போட்டியே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை நடந்துள்ள உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக போட்டிகளில் அணியை வழநடத்திய கேப்டன்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
1. மகேந்திர சிங் தோனி (2007 - 2016)
டி20 உலககோப்பையை ஐசிசி தொடங்கிய முதல் சீசனில் இருந்து இந்திய அணியை வழிநடத்தி வந்தவர் மகேந்திர சிங் தோனி. மொத்தம் 33 போட்டிகளுக்கு அணியை வழிநடத்தியுள்ள இவர் 20 போட்டிகளில் வென்றுள்ளார். மேலும் 11 போடிகளில் தோல்வியும், 1 போட்டி டிராவிலும், ஒரு போட்டியில் முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிக போட்டிகளில் அணியை வழிநடத்திய கேப்டன் என்பதுடன் அதிக வெற்றிகளைக் கண்டவர் என்பது தோனிக்கு கூடுதல் சிறப்பு.
2. டிரேன் ஷம்மி (2012 -2016)
தன்னிடம் வழங்கப்பட்ட அணியை மிகவும் சிறப்பாக வழி நடத்தி டி20 உலககோப்பையை வென்று காட்டி கேப்டன் பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இளைஞர்களுக்கு வழிவிட்ட தோனியைப் போல் செய்தவர் தான் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் டிரேன் ஷம்மி. இவரது தலைமையில் மேற்கு இந்திய தீவுகள் அணி மொத்தம் 18 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 11ல் வெற்றியும் 5ல் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவிலும் ஒரு போட்டி முடிவு எடுக்கபடாமல் முடிந்துள்ளது. இரண்டு டி20 உலககோப்பையை (2012, 2016)வென்ற ஒரே கேப்டன் இவர் மட்டும் தான்.
3.கோலிங்வுட் (2007 - 2010)
இங்கிலாந்து அணி வென்ற முதல் உலககோப்பை (2010) கோலிங்வுட் தலைமையில் வென்றது தான். இவரது தலைமையில் மொத்தம் 17 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 8ல் வெற்றியும் 8ல் தோல்வியும் அடைந்துள்ளது. மேலும், ஒரு போட்டி முடிவு எடுக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
அதிக போட்டிகளில் அணியை வழிநடத்தியவர்கள் என்ற வரிசையில் உள்ள தோனி, ஷம்மி, கோலிங்வுட் ஆகியோர் உலக்கோப்பையை வென்ற கேப்டன்களும் என்பது கூடுதல் சிறப்பு.