T20 World Cup 2022: டி20களில் மேலும் ஒரு சாதனை.. முதல் இரண்டு இடங்களை விட்டுகொடுக்காத ரோகித், கப்தில்.. இப்போ எதில்?
நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்தில் 7-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை அணிக்கு தேர்வாகியுள் ளார்.
கிரிக்கெட் போட்டிகளின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் டி20 உலககோப்பைப் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை 2022 அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை தொடங்க இருக்கிறது.
இந்த தொடருக்காக பல்வேறு நாடுகளும் உலகக் கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவிக்கப்பட்டது. ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை மூன்றாவது முறையாக கேன் வில்லியம்சன் வழிநடத்த உள்ளார்.
கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவில் மார்டின் கப்தில் இடம் பெற்றிருந்தார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இறுதிப்போட் டிக்கு முன்னேறிய அணியில் இடம் பிடித்தவர்களில் 3 பேர் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் மாற்றமின்றி அணியில் இடம் பிடித்திருந்தனர். கடந்த உலக கோப்பை போட்டியில் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. போல்ட், பெர்குசன், டிம் சவுத்தி மற்றும் ஆடம் மில்னே ஆகியோரைக் கொண்ட நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மின்னல் வேக தாக்குதலை எதிரணிகளுக்கு வழங்கும். அதேபோல், இஷ் சோதியுடன் பிரேஸ்வெல் மற்றும் மிட்செல் சான்ட்னர் சுழற்பந்து வீச்சுக்கு பங்களிப்பு கொடுக்கலாம்.
தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்தில் 7-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை அணிக்கு தேர்வாகியுள் ளார். இதில் ஆடுவதன் மூலம் அவர் அதிக முறை 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன்னதாக முன்னாள் நியூசிலாந்து வீரர்களான ராஸ் டெய்லர் மற்றும் நாதன் மெக்கல்லம் ஆகியோர் மட்டுமே 6 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல், இதுவரை 7 டி20 உலக கோப்பைகளில் டுவைன் பிராவோ, கிறிஸ் கெய்ல், முகமது மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் விளையாடியுள்ளனர்.
8 வது டி20 உலக கோப்பையில் விளையாட உள்ள வீரர்கள்:
கடந்த 2007 முதல் இதுவரை 7 டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. அடுத்த அக்டோபர் மாதம் தொடங்கும் தொடரானது 8 வது டி20 உலக கோப்பை தொடர். இந்த நிலையில், வருகிற உலக கோப்பை தொடரையும் சேர்த்து ரோகித் சர்மா மற்றும் ஷகிப் அல் ஹசன் தங்களது 8வது உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கின்றனர்.
இதன் மூலம், 7 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்று 8 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்றவுள்ள வீரர்கள் என்ற பெருமையை ரோகித் மற்றும் ஷகிப் பெற இருக்கின்றனர்.
டி20 களில் அதிக ரன்கள்:
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்திலும், விராட் கோலி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து தொடக்க வீரர் மார்டின் கப்தில் இருக்கிறார்.