மேலும் அறிய

T20 World Cup 2022: 16 கேப்டன்களும் ஒரே நேரத்தில் காட்டிய மாஸ்..! ஐசிசி வெளியிட்ட போஸ்..!

டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 16 அணிகளின் கேப்டன்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நாளை 8வது டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடர் (நாளை) அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 16 அணிகள் ஏழு ஆஸ்திரேலிய நகரங்களில் 45 போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 16 அணிகள் அதிகாரப்பூர்வமாக மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட போட்டியில் விளையாடுகிறது. முதல் கட்டமாக அக்டோபர் 16 முதல் தகுதிச் சுற்றில் 8 அணிகள் விளையாடி லீக் போட்டிகளுக்குள் தகுதி பெறும்.

தகுதிச் சுற்றில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற பலம் வாய்ந்த அணிகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும். சூப்பர் 12 ஸ்டேஜில் ஏற்கனவே முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், முதல் சுற்றில் விளையாடி தகுதி பெறும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குள் செல்லும். 

முதல் சுற்று

குழு ஏ

நமீபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

குழு பி

அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே

சூப்பர் 12

குழு 1

ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, குரூப் ஏ வெற்றியாளர், குரூப் பி இரண்டாம் இடம்

குழு 2

பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, குரூப் பி வெற்றியாளர், குரூப் ஏ இரண்டாம் இடம்

இடங்கள்: 

2022 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் போது ஆஸ்திரேலியா முழுவதும் ஏழு மைதானங்கள் பயன்படுத்தப்படும், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப் போட்டியும், அரையிறுதிப் போட்டிகள் அடிலெய்டு ஓவல் மற்றும் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும்.

பிரிஸ்பேனில் உள்ள கப்பா, ஜீலாங்கில் உள்ள கார்டினியா பார்க், ஹோபார்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மற்றும் பெர்த் மைதானங்களிலும் போட்டிகள் நடைபெற இருக்கிறது. 

16 அணிகளின் கேப்டன்கள்: 

இந்தநிலையில், டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 16 அணிகளின் கேப்டன்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பாகிஸ்தானின் அணியின் கேப்டன் பாபர் அசாம், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

புகைப்படத்தில் இருக்கும் மற்ற அணிகளின் கேப்டன்கள் பின்வருமாறு :

  • தென்னாப்பிரிக்கா - பவுமா
  • இங்கிலாந்து - ஜாஸ் பட்லர்
  • இலங்கை - தசுன் சனகா
  • ஆப்கானிஸ்தான் - முகமது நபி
  • வங்காளதேசம் - ஷகிப் அல் ஹசன்
  • அயர்லாந்து - ஆண்ட்ரூ பால்பிர்னி
  • நமீபியா - ஹெகார்ட் எராஸ்மஸ்
  • நியூசிலாந்து - கனே வில்லியம்சன்
  • நெதர்லாந்து - ஸ்காட் எட்வர்ட்ஸ்
  • ஸ்காட்லாந்து - ரிச்சர்ட் பெரிங்டன்
  • ஐக்கிய அரபு நாடுகள் - சிபி ரிஸ்வான்
  • வெஸ்ட் இண்டீஸ் - நிக்கோலஸ் பூரன்
  • ஜிம்பாவே - கிரேக் எர்வின்

தலைப்பு செய்திகள்

IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget