மேலும் அறிய

Viral Video: இந்தியா-நெதர்லாந்து மேட்ச்சில் பூத்த காதல்.. ப்ரோபோஸ் செய்த இளைஞன்.. ரிசல்ட் தெரியுமா?

இந்தியா-நெதர்லாந்து அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த இந்திய ரசிகர் ஒருவர் தோழியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

இந்தியா-நெதர்லாந்து அணிகள் இடையிலான ஆட்டம் ஆக்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த இந்திய ரசிகர் ஒருவர் தோழியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

விரலில் மோதிரம் அணிந்து காதலை வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து காதலை ஏற்றுக் கொண்ட அந்த இளம்பெண் அவரை கட்டி அணைத்துக் கொண்டார். அப்போது பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் புன்னகைத்து ஆர்ப்பரித்தனர்.  

இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179  ரன்களைக் குவித்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல் 9 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். பின்னர், கேப்டன் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி களமிறங்கினார்.  இருவரும் நிதானமாக விளையாடினர். ரோகித் சர்மா 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் மொத்தம் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் விளாசினார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகோப்பை டி20 போட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. டி20 போட்டியில் பலமிகுந்த அணியாக வலம் வரும் இங்கிலாந்து அணியும், அயர்லாந்து அணியும் மெல்போர்ன் நகரில் இன்று மோதியது.

158 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி ஆடிக்கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தோல்வியால் அயர்லாந்து வீரர்கள் குஷி அடைந்துள்ளனர். மேலும், இங்கிலாந்து வீரர்களும், ரசிகர்களும் சோகம் அடைந்துள்ளனர்.  

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தனர். இதன்படி, முதலில் பேட் செய்த அயர்லாந்து அணிக்கு ஸ்டிர்லிங் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். அவர் 8 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர்,ஜோடி சேர்ந்த கேப்டன் பால்பிரைன் – டக்கர் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 21 ரன்களில் சேர்ந்த இந்த ஜோடி 103 ரன்களில்தான் பிரிந்தது.

அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த 27 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு அடுத்தடுத்து அயர்லாந்து விக்கெட்டுகள் விழுந்தது. ஹாரி டெக்டர் டக் அவுட்டாகிய நிலையில், அடுத்து வந்த டாக்ரெலும் டக் அவுட்டாகினார். சிறப்பாக ஆடிய கேப்டன் பால்பிரைன் 42 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அயர்லாந்து அணி ஆட்டத்தை பார்த்தபோது அவர்கள் 200 ரன்கள் எட்டுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்கள் 19.2 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

158 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அயர்லாந்து அணி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தது. தொடக்க வீரரும், கேப்டனுமாகிய பட்லர் முதல் ஓவரிலே டக் அவுட்டாகினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் ஹேல்ஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்சும் 6 ரன்களில் அவுட்டாக, ஹாரி ப்ரூக் 18 ரன்களிலும், நிதானமாக ஆடிய டேவிட் மலான் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி நடுவர்கள் முடிவை அறிவித்தனர். இதன்படி, அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியால் அயர்லாந்து அணி புள்ளிப்பட்டியலில் தற்போது ஆஸ்திரேலியாவை விட ஒரு இடம் உயர்ந்து நான்காவது இடத்தில் உள்ளது. களத்தில் மொயின் அலி - லிவிங்ஸ்டன் இருந்ததால் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. மேலும், சாம் கரணும் பேட்டிங் செய்ய தயாராக இருந்தார். ஆனால், மழையால் போட்டி முடிவு மாறியதால் இங்கிலாந்து ரசிகர்கள் சோகம் அடைந்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget