மேலும் அறிய

IND vs ENG Semi Final T20 WC: இறுதிப்போட்டிக்கு செல்லுமா ரோகித் படை..? தடையாய் இருக்குமா பட்லர் அணி.. இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்!

டி20 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உலககோப்பை டி20 போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. 

இன்று நடைபெற இருக்கும் இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி வருகிற ஞாயிற்றுகிழமை பாகிஸ்தான் அணியுடன் மோதும்.  இங்கிலாந்து இடையிலான இன்றைய போட்டியில் இந்தியா அணி வெற்றிபெறும் பட்சத்தில், உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் இந்தியாவும் சந்திக்கும். 

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி புகழ்பெற்ற அடிலெய்டு மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் மிடில் ஆர்டர் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 246 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்திலும், சூர்யகுமார் யாதவ் 225 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மேலும், கேஎல் ராகுல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் பார்முக்கு திரும்பினார். அதேபோல், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளாக ஜொபிக்கவில்லை. இன்றைய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா ஜொலிக்கும் பட்சத்தில் இந்திய அணி நிச்சயம் வெற்றிபெறும். 

அடிலெய்டு ஓவல் ஆடுகளம் மெதுவான பந்துவீச்சாளர்களுக்கு உதவுவதால் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தேர்ந்தெடுக்கப்படலாம். டி20 உலகக் கோப்பையில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டதிறனும், ஃபார்மும் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ரிஷப் பண்ட் இன்றைய போட்டியிலும் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சிலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

ஹெட் டூ ஹெட் :

இந்தியா - இங்கிலாந்து அணிகள் 22 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், இந்தியா 12 போட்டிகளிலும், இங்கிலாந்து 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

அடிலெய்டு ஓவல் மைதானம்:

அடிலெய்டு ஓவல் மேற்பரப்பு சிறந்த பேட்டிங்கிற்கு ஏற்ற ஆடுகளமாக கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் மொத்தம் 14 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அடிலெய்ட் மைதானத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிராக 233 ரன்களை குவித்துள்ளது. குறைந்தபட்சமாக ஜிம்பாப்வே அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக 117 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 158 ரன்களை சேஸ் செய்ததே அதிகபட்ச ரன்னாகும்.

இந்தியா vs இங்கிலாந்து வானிலை: 54% ஈரப்பதம் மற்றும் 19 km/hr காற்றின் வேகத்துடன் போட்டி நாளில் வெப்பநிலை 21°C ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆட்டத்தின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை.

கணிக்கப்பட்ட இந்திய அணி:

கேஎல் ராகுல்,ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த்/தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல்/சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

கணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget