IND vs AUS Warm Up Match: ஹர்திக் பாண்ட்யா அவுட்டானதை கொண்டாடினாரா சூர்யகுமார் யாதவ்..? வைரலாகும் வீடியோ..!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
உலககோப்பை டி20 தொடரில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நடப்பு உலககோப்பை போட்டித்தொடருக்கு தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுடன் பயிற்சி போட்டியில் ஆடியது,
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. இதில், விராட்கோலி ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா மிகவும் தடுமாறினார். அவர் கனே ரிச்சர்ட்சன் வீசிய பவுன்சர் பந்தில் டிம் டேவிட்டிடம் எளிதான கேட்ச் கொடுத்து 2 ரன்களில் வெளியேறினார். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்து களத்தை விட்டு வெளியேறியபோது, மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் நின்று கொண்டிருந்தார்.
— Guess Karo (@KuchNahiUkhada) October 17, 2022
அப்போது, அவர் சிறப்பாக பவுன்சர் வீசிய ரிச்சர்ட்சனுடன் ஏதோ பேசுகிறார். பின்னர், அவரை பாராட்டி தனது கையால், ரிச்சர்ட்சன் கையை இடித்து சியர்ஸ் செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அணியின் சக வீரர் ஆட்டமிழந்ததும், ஆட்டமிழக்க வைத்த எதிரணி பந்துவீச்சாளரை சூர்யகுமார் யாதவை பாராட்டியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சூர்யகுமார் யாதவ் எதற்காக கனே ரிச்சர்ட்சனுடன் சியர்ஸ் செய்தார் என்று இதுவரை தெரியவில்லை.
இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 186 ரன்களை குவித்தது. இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவிற்கு மிட்செல் மார்ஷ், ஆரோன் பிஞ்ச் அதிரடி தொடக்கம் அளித்தனர்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டபோது, முகமது ஷமி இந்த ஆட்டத்தில் தனது முதல் ஓவரை வீசினார். ஆனால், அந்த ஓவரை அபாரமாக வீசிய ஷமி 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் படிக்க : IND vs AUS Warm Up Match: என்னா எறி.. இதுதான் என்னோட வெறி.. பீல்டிங்லையும் கிங் என நிரூபித்த கோலி.. வைரல் வீடியோ!
மேலும் படிக்க : T20 World Cup 2022: இவர்கள் இருந்தாலே போதும், இந்தியா உலகக்கோப்பையை வெல்லும்.. அணியில் யார் ? யார் ? கணித்த ஐசிசி!