Watch Video: கனமழையால் சரிந்து விழுந்த கூரை..! குளம்போல மாறிய மைதானம்..! இலங்கை - ஆஸ்திரேலிய டெஸ்ட் தாமதம்..!
இலங்கை- ஆஸ்திரேலிய மோதும் டெஸ்ட் போட்டி நடைபெறும் காலே மைதானத்தின் கூரை கடுமையான மழையால் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. முதல்நாளில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களை எடுத்தது.
இந்த நிலையில், நேற்று இரவு இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் காலே மைதானத்திலும் புயல்காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது.
Situation now at Galle #SLvsAUS pic.twitter.com/4NBbulUEQn
— Anjana Kaluarachchi (@Anjana_CT) June 30, 2022
இந்த கனமழையால் காலே மைதானம் முழுவதும் குளத்தில் தேங்குவது போல மழைநீர் தேங்கியது. தார்ப்பாய்களால் முழு மைதானமும் மூடப்பட்டும், தார்ப்பாய் மீது குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது போல மழைநீர் தேங்கி நின்றது. மழையை அகற்றும் பணியில் மைதான பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு முழுவதும் வீசிய பலத்த காற்றினால் மைதானத்தில் இருந்த கேலரி ஒருபுறம் சரிந்து விழுந்தது. மற்றொரு புறம் பெவிலியன் அருகே இருந்த கண்ணாடி மொத்தமாக உடைந்து விழுந்தது.
The weather is so intense here at Galle that a small enclosure/stand has just collapsed. #SLvAUS pic.twitter.com/uBkzKONxBP
— Adam Collins (@collinsadam) June 30, 2022
தற்போது இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், இன்று டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழைநீர் அகற்றப்பட்டு நன்றாக வெயில் அடிக்கத் தொடங்கிய பிறகு, ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க : ENG vs IND: 5-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி எடுக்கவேண்டிய முக்கியமான 3 முடிவுகள் என்னென்ன?
மேலும் படிக்க : Mohammed Shami: T20 உலகக் கோப்பை தொடரில் ஷமி பங்கேற்பதில் சிக்கலா? என்ன காரணம்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




















